Ticker

6/recent/ticker-posts

Chandrayaan 3: நிலவில் பிரக்யான் ரோவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீடியோவை பகிர்ந்த இஸ்ரோ!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று சந்திரயான்-3  விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் பாய்ந்து செல்லும் முதல் மற்றும் பிரத்யேக காட்சிகளை வெளியிட்டுள்ளது.  
முன்னதாக, பிரக்யான் நிலவில் பயணத்தை தொடங்கியதை இஸ்ரோ உறுதிப்படுத்தியது. 

குறைந்தது அடுத்த இரண்டு வாரங்களுக்கு சந்திர மேற்பரப்பை ஆய்வு செய்யும் ரோவர் பிரக்யானின் மென்மையான வளைவு நடையை இஸ்ரோ வெளியிட்டுள்ள வீடியோ காட்டுகிறது. சந்திரனின் தென் துருவத்தில் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க காட்சி இதுவாகும். நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் ஒரே நாடு இந்தியா தான் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

முன்னதாக மற்றொரு ட்வீட்டில், இஸ்ரோ அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி மற்றும் இயல்பாக நடைபெற்று வருகிறது என்று கூறியிருந்தது. "அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி உள்ளன. அனைத்து அமைப்புகளும் இயல்பானதாக காணப்படுகிறது. லேண்டர் மாட்யூல் பேலோடுகளான ILSA, RAMBHA மற்றும் ChaSTE ஆகியவை இன்று இயக்கப்பட்டுள்ளன. ரோவர் மொபிலிட்டி (நகரும்) செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. ப்ராபல்ஷன் மாட்யூலில் SHAPE பேலோட் வரும் ஞாயிற்றுகிழமை இயக்கப்படுகிறது," என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பைத் தொடுவதற்கு சற்று முன்பு நிலவின் படத்தைப் படம்பிடித்த லேண்டர் இமேஜர் கேமராவின் படங்களையும் இஸ்ரோ நேற்று வெளியிட்டது. பூமி மற்றும் சந்திரனைச் சுற்றி 40 நாள் சுற்றுப்பாதை பயணத்திற்குப் பிறகு, சந்திரயான்-3 லேண்டர், 'விக்ரம்', கடந்த புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா சாதனை படைத்தது. மேலும், அமெரிக்க, சோவியட் யூனியன், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியா நிலவில் தடம் பதித்துள்ளது. 
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் மாதம் நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) கனரக ஏவுகணை வாகனம் பயன்படுத்தப்பட்டது. சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து இஸ்ரோ மற்றும் இந்தியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

SOURCE:zeenews


 



Post a Comment

0 Comments