
குறள் 937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
தம்பி... ஒருத்தன் பொழுதன்னைக்கும், சூதாடுத எடத்துல அதே சோலியா கெடந்தாமுன்னா. என்ன ஆவும் தெரியுமா? அவனோட பரம்பரைச் சொத்தும் அழிஞ்சுரும். குடும்பப் பெருமையும் சீரழிஞ்சு பொயிரும் தம்பி.
குறள் 939.
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
மாப்ள.. சூதாட்டத்துக்கு மட்டும் ஒருத்தன் அடிமை ஆய்ட்டாம்னு வச்சுக்க.. அம்புட்டுதான்... அவனுக்கு கெடைச்ச புகழ், அவன் படிச்ச படிப்பு,
சேத்து வச்ச சொத்து பத்து, சாப்பாடு, உடுத்துத துணிமணி..
இந்த அஞ்சும் அவனை விட்டு வெலகிப் போயிரும் மாப்ள.
குறள் 941.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
மாப்ள.. ஓரோருத்தருக்கும், அவொ ஒடம்புல வாதம், பித்தம் கபம் ங்கிற மூணும் எவ்வளவு இருக்கணுமோ அந்த அளவுல சரியா இருக்கணும். அதோட அளவு கூடுனாலும் நல்லது இல்லை. கொறைஞ்சு போனாலும் நல்லது கிடையாது மாப்ள.
குறள் 942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
தம்பி.. முந்தி சாப்பிட்ட சாப்பாடு செமிச்சிட்டுது ன்னு உணர்ந்த பொறவு தான், அடுத்தாப்ல சாப்பிடணும். இதை உணர்ந்து நடக்க ஆளுங்களோட ஒடம்புக்கு, எந்த மருந்துமே தேவைப் படாது தம்பி.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments