Ticker

6/recent/ticker-posts

இசைக்கேட்டால்...!


இசைக்கேட்டால் உள்ளம் அசையும்
அசை போட்டே அகமும் மகிழும்
திசை எங்கும் நாதம் பரவும்
மிசை போன்றே நெஞ்சில் இனிக்கும்
இசைய வைக்கும் அழகு ஒலி
இன்னிசையே என்றும் போக்கும் கலி
கசிய வைக்கும் இதயத்தின் வலி
கானமழையில் மாந்தர் எல்லோரும் பலி
இசைமயமாய் இருக்கும் உலகம்
இன்பத்தால் ஈர்க்கும் மாய வளாகம்
கல் மனதையும் கரைய வைக்கும்  
கண்ணீரையும் கட்டின்றி வரவழைக்கும்
உல்லாசப் பயணத்தில் உற்சாகம் தரும்
உழைத்துக் களைத்தவர்க்கும் ஆறுதல் தரும்
உயிரினங்கள் பகை மறந்து ஒன்றாகும்
உறவாடி மனங்களை மயங்க வைக்கும்
பிறந்தாலும் இறந்தாலும் இசையே வழக்கு
பொழுதுகள் தோறும் இசையே நம்மவர்க்கு
வார்த்தைகள் இல்லாத மொழி அவைக்கு
வருடியே வழங்கும் அன்பை நமக்கு

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை


 



Post a Comment

0 Comments