Ticker

6/recent/ticker-posts

நலம் வாழ -மருத்துவப் பகுதி-37


ஒவ்வொரு வாரமும் நாம் உடல் நலம் குறித்த பல தகவல்களை நாம் பார்த்து வருகின்றோம் அதில் சென்ற வாரம் மைட்டோகாண்ட்ரியா அதாவது ஆற்றல் மூலம் எவ்வாறு ஒரு குடும்பத்திற்கு தேவையான ஆற்றல் சமையலறையில் வழங்கப்படுகிறது. 

அதுபோலவே நமது உடலுக்கு அதாவது ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஆற்றலை தயாரிக்க மைட்டோகாண்ட்ரியா என்ற ஒரு சமையல் அறை தேவைப்படுகிறது. 

அவற்றின் பணிகளை பார்ப்போம் மிக முக்கியமான  பங்கு செல் சுவாசிக்கும் பொழுது செல்லுலார் சுவாசத்தின் மூலம் ஏடிபி ஏடிபிஐ உருவாக்குவதாகும் மைட்டோகாண்ட்ரியா செல்லுக்குள் இருக்கும் ஆக்சிஜனை பயன்படுத்தி ரசாயன ஆற்றலை உணவில் இருந்து ஏ டிபியாக Adinosin Tryphosphate மாற்றுகிறது.

சற்று குளறுபடியாக உள்ளது அல்லவா?

எவ்வாறு நாம் கடைகளில் வாங்க கூடிய உணவுப் பொருட்களை அரிசி பருப்பு காய்கறிகள்
போன்றவற்றை சமைக்காமல் உண்ண முடியாது அல்லவா? அதுபோலவே ஆக்சிஜன் குளுக்கோஸ் மற்றும் விட்டமின் சி இவற்றைக் கொண்டு செல்கள் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்தான் ஏடிபி.

உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் ஏற்படும் பொழுது ஒவ்வொரு சுழற்சியின் போதும் ஏற்படக்கூடிய அனைத்து அமிலங்களின் உற்பத்தியும் இந்த மைட்டோகாண்ட்ரியாவினால் தான். மேலும் ஒரு செல் உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்திருக்கிறதா என்பதை தீர்மானிப்பதிலும் மைட்டோகாண்ட்ரியா பெரும் பங்கு வகிக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

சரி மைட்டோகாண்ட்ரியாவை பற்றிய ஏராளமான தகவல்கள் இருக்கின்றது.ஆனால் சிலவற்றை மட்டுமே நாம் இங்கு பார்த்தோம் நமது உடலில் ஆற்றல் மூலமாக இருக்கக்கூடிய மைட்டோகாண்ட்ரியாவை நமது உணவுப் பழக்க வழக்கங்களின் மூலமாக முறையற்ற வாழ்க்கையின் மூலமாக பாதுகாக்க தவறி விட்டோம் எவ்வாறு அதை பாதுகாப்பது. நமது கண்ணுக்குத் தெரியாத ஆனால் நம்மை பாதுகாத்துக் கொண்டு இருக்கக்கூடிய ஒரு சிலவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பார்க்கலாம்.

மைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியம் செல்லுலார் செல்கள் சேதம் அடைவதனால் பாதிக்கப்படுகிறது.

மேலும் நமது மன குழப்பங்கள் மன அழுத்தம் நமது சுற்றுச்சூழலில் உள்ள ரசாயன மாற்றங்கள் ஆல்கஹால் அருந்துவது போன்றவற்றாலும் பாதிக்கின்றது.

ஊட்டச்சத்துள்ள பழங்களையும் உணவுப் பொருட்களையும் எடுப்பதன் மூலமாக நாம் மைட்டோகாண்ட்ரியாவை பாதுகாக்கலாம்.

நல்ல புரதங்களை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் antioxidant உள்ள பழங்கள் காய்கறிகள் உண்பதனாலும் மெக்னீசியம் அதிகம் கலந்த உணவுகள் அதாவது அடர் பச்சை நிற காய்கறிகள் ,முழு தானியங்கள் வைட்டமின் சி மற்றும் இ ,பி வைட்டமின்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களை சேர்த்துக் கொள்வதன் மூலமாகவும் ,மீன் எண்ணெய் ,தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், ஆளி விதை எண்ணை போன்ற எண்ணெய்களை சேர்த்துக் கொள்வதன் மூலமாகவும் செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா அதாவது ஆற்றல் மூலம் உற்பத்தி களத்தை  அதிகரிப்பதன் மூலமாகவும் அவற்றை பாதுகாப்பதன் மூலமாகவும் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. 

Post a Comment

0 Comments