Ticker

6/recent/ticker-posts

Ad Code



அமெரிக்காவில் பழிக்கு பழி நடந்த பயங்கரம்: இந்திய போதைப்பொருள் கடத்தல்காரர் சுட்டுக் கொலை


அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் சுனில் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சுனில் யாதவ் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா பொலிஸார் இந்தக் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொலையை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் உறுப்பினர் ரோஹித் கோடாரா செய்ததாகக் கூறி தானே பொறுப்பேற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் முக்கிய உறுப்பினராக இருந்தாலும், தற்போது தனித்து செயல்பட்டு வந்தார். அவர் மீது ராஜஸ்தானில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தக் கொலைக்கு காரணம், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் மற்றொரு உறுப்பினரான அங்கித் பாதுவை  சுனில் யாதவ் கொன்றதற்கு பழி வாங்குவதற்காக செய்ததாக ரோஹித் கோடாரா கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவுக்குச் சென்ற பின்னரும் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினரைப் பற்றியும் தவறான தகவல்களை பரப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கிய குற்ற வழக்குகளில் சிக்கும் கும்பல்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கிலும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அத்துடன் நடிகர் சல்மான் கானை கொல்ல முயற்சி செய்ததாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

lankasri




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments