
வணிக ரீதியில் தனது வாரசஞ்சிகையை கொண்டு செல்லாமல், தனக்கென கொள்கை ஒன்றை வகுத்துக்கொண்டு அதில் பயணிக்கிறது வேட்டை.
சினிமா செய்திகள் இல்லை. கிசுகிசுக்கள் சுத்தமாக இல்லை. பல புதிய எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு இடம் அளித்து வேகமாய் முன்னேறிவருகிறது வேட்டை.
காலத்திற்கு தகுந்து, வரும் புதிய தொழிற்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு தன்னை புதுப்பித்துக்கொள்ளாத தனிமனிதனோ, நிறுவனங்களோ முன்னோக்கி பயணித்து வெற்றி காண்பது கடினம்.
அந்த வகையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் AI தொழில்நுட்பத்தை வேட்டை பயன்படுத்தி புதிய அத்தியாயம் ஒன்றை துவங்கி வைத்திருக்கிறது.
இதில் சிறப்பு என்னவென்றால் இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிக்கைகள் மற்றும் வாரசஞ்சிகைகளில் முதன் முதலாக AI யை பயன்படுத்தி செய்தி வாசிக்க வைத்த பெருமை வேட்டையையே சாரும்.
வளரட்டும் வேட்டை.இன்னும் பலருக்கு அது வாய்ப்புகள் வழங்கட்டும்.சமுதாயத்திற்கு விடிவெள்ளியாய் ஒளி தரட்டும்.
வேட்டை ஆசிரியருக்கும், அதில் பயணிக்கும் எழுத்தாளர்கள், வாசகர்கள் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
கொல்லால் எச்.ஜோஸ்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments