ஒவ்வொரு வாரமும் நலம் குறித்த பல தகவல்களை வேட்டை மின்னுதல் மூலமாக பார்த்து வருகின்றோம். இந்த வார தகவல் தொகுப்பில் நம்மை மிகவும் அச்சுறுத்துகின்ற பரவலாக கேள்விப்படுகின்ற நோய்களை குறித்த தகவல்களை பார்க்கலாம்.
நமது உடலில் மொத்தம் 12 ராஜ உறுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு உறுப்பிலும் வரக்கூடிய தற்போது நம்மை அச்சுறுத்துகின்ற நோய்களை ஒவ்வொரு வாரமும் நாம் காணலாம்.
இருதய நோய்
சாதாரணமாக இன்று வாழ்க்கை முறை நோய் அதாவது (lifestyle disease) உலகளாவிய பார்வையில் இது மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது என்று கூறலாம். குறைந்தது ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று பேர் இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் வயது பாலினம் குடும்ப வரலாறு போன்ற மாற்றியமைக்க முடியாத காரணங்கள் இருதய நோய்களுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதய நோய் அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டதாக தெரிகிறது. இப்பொழுது உணவு உடல் செயலற்று தன்மை மற்றும் மன அழுத்தம் போன்ற கட்டுப்படுத்தக்கூடிய ஆரம்ப காரணிகள் பெரும்பாலும் இருதய நோய்களின் தாக்கம் அதிகமாக தீர்மானிக்கின்றது
நாம் அதிகமாக பார்க்கக்கூடிய இருதய நோய்கள் சிலவற்றை இங்கு நான் பட்டியலிடுகின்றேன்
1.கான்ஜென்ஷியல் இதய நோய்( Congential heart disease )
2.கரோனரி இதய நோய்( Coronary heart disease)
3.பெருந்தமனி தடிப்பு கார்டியோமயோபதி(Atherosclerosis)
4.மாரடைப்பு (Heart attack)
5.பெரிகார்டிடிஸ் (Pericarditis)
6.புற வாஸ்குலர் நோய்( Peripheral vascular disease)
7.வாத இதய நோய் (Rheumatic heart disease)
8.பெருநாடி வால்வு(Aortic valve stenosis)
9.ஸ்டெனோசிஸ் இதய செயலிழப்பு (Congestive heart failure)
10 இதய செயலிழப்பு(heart failure)
11.ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்(Atrial fibrillation)
எவ்வாறு பல வகை பட்டியலிட்டாலும்
இது அனைத்தும் இருதயங்களில் ஏற்படும் ஒரு குறைபாடு தான்.
இவற்றை குறித்து நாம் பார்க்கலாம்
முதலில் பிறவி இருதய நோய்கள் (congential heart disease)ஏற்பட காரணம்
முதலில் சுற்றுச்சூழல் காரணிகளை பார்க்கலாம்.
1. வைரஸ் தொற்றுகள்
2. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் எடுக்கக்கூடிய ரூபெல்லா எனக்கூடிய மருந்து
3. லித்தியம் போன்ற மருந்துகளை எடுப்பது
4. முகப்பருக்களுக்காக மற்றும் சில வலிப்பு நோய்கள் வராமல் இருக்கக்கூடிய எதிர்ப்பு மருந்துகள் எடுப்பது நாளும்
5. மது பழக்கங்கள்
6. கருவிற்கு ஆல்கஹால் நோய் குறிகளுடன் எஃப் ஏ எஸ் (FAS).
7. புகைப்பிடித்தல்
8. போதைப் பழக்கங்கள்
9. தாய் வழி நாள் பட்ட நோய்கள் அதாவது நீரிழிவு ,பிகேயு(PKU), மற்றும் வைட்டமின் பி குறைபாடு போலிக் அமிலத்தின் குறைபாடு போன்றவை பிறவி இருதய குறைபாடுகளுக்கான காரணங்களாக அறியப்படுகின்றன.
மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம் சந்திக்கும்வரை விடைபெறுவது
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments