Ticker

6/recent/ticker-posts

இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நடந்த தாக்குதல்! பேசுபொருளாகியுள்ள The Gazaவின் முகநூல் பதிவு


மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூழ்கடித்த செய்தி இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

மேலும், இந்த தாக்குதலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

ஐரிஸ் தேனா போர்க்கப்பலில் இருந்து 32 பணியாளர்களை மீட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 32 ஈரானிய கடற்படையினரின் உயிரை காப்பாற்றிய இலங்கை கடற்படைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் த காசா எனும் முகநூலில் “ஸ்ரீ லங்கா” என்று பதிவேற்றியதை அடுத்து சமூக வலைத்தளங்களில் அந்த பதிவு தற்போது பேசுபொருளாகி வருகின்றது.

tamilwin


 




Post a Comment

0 Comments