இப்றாஹீம் நபியவர்களின் அடுத்த மனைவி சாரா என்பவருக்குப் பிறந்தவர் நபி இஷ்ஹாக் (அலை) ஆவார்.
நபி இஷ்ஹாக் (அலை) அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் நபி யாகூப் (அலை). நபி யாகூப் (அலை) அவர்கள் இஸ்ராயீல் எனவும் அழைக்கப்பட்டார்கள். இவரிலிருந்தே “பனூ இஸ்ராயீல்” ஆரம்பமாகின்றது. யாகூப் (அலை) அவர்களுக்கு 12 பிள்ளைகள். அதில் ஏழாமவர் நபி யூஸுப் (அலை). நபி யூஸுப் (அலை) அவர்கள் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
உலகத்து மனிதர்களில் அழகிற் சிறந்தவராக நபி யூஸுப் (அலை) அவர்கள் கருதப்படுகின்றார்கள். இவரது அழகிற் பொறாமை கொண்ட சகோதரர்கள் இவரைக் பாழும் கிணமொன்றில் தள்ளிவிட்டனர். கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்ட நபி யூஸுப் (அலை) அவர்கள் அடிமையாக வாங்கப்பட்டு, இறுதியாக அமைச்சர் ஒருவரிடம் சேர்க்கப்பட்டார்.
நபிகளாரின் அழகில் மயங்கிய அமைச்சரின் மனைவி ஸுலைஹா அன்னாரை அடைய முயற்சித்த சம்பவமும், நபியவர்களின் அழகில் சொக்கிய மங்கையர்கள் பழத்தை வெட்டிக் கொள்வதற்குப் பதிலாக தமது விரல்களை வெட்டிக் கொண்ட சம்பவமும், அல்-குர்ஆனில் அழகாக விபரிக்கப்படுகின்றன.
இறுதியாக எகிப்தின் பெரும் அரச பதவி வகித்த யூஸுப் (அலை) அவர்கள் தமது தகப்பனார், சகோதரர்களை எகிப்திற்கு அழைத்து, தம்மோடு இணைத்துக் கொண்டதாக வரலாறு கூறுகின்றது!
(தொடரும்)
0 Comments