ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த ராட்சத மலைப்பாம்பு - தைரியமாக மீட்ட இளைஞர்கள்!

ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த ராட்சத மலைப்பாம்பு - தைரியமாக மீட்ட இளைஞர்கள்!


‘பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள்’…ஆம் உடல் வலிமைப் பெற்ற வீரர்கள் கூட பாம்பு என்றாலே அச்சத்தில் ஓடுவார்கள். 

 
சாரை பாம்பு, தண்ணீர் பாம்பு போன்றவற்றிற்கு விஷத்தன்மை இல்லை என்று சொன்னால் கூட அதைக் கண்டால் உடல் அச்சத்தில் நடங்குவதோடு 10 அடி தூரம் போய் நின்றுவிடுவோம், அந்தளவிற்கு அனைவரையும் உயிர் பயத்தில் வைத்துள்ளது பாம்புகள் தான். முன்பெல்லாம் காடுகளில் தான் பாம்புகளை அதிகளவில் பார்த்திருப்போம். ஆனால் நிலைமை இன்றைக்கு அப்படி இல்லை, காடுகள் மற்றும் புதர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவருவதால் நம் வசிக்கும் பகுதிகளை நோக்கி தான் படையெடுக்கத் தொடங்கிவிட்டது பாம்புகள். அதிலும் மலைப்பாங்கான இடங்களுக்கு அருகில் இருந்தால், விஷத்தன்மையுள்ள பாம்புகளின் நடமாட்டம் வீடுகளுக்குள் கூட அதிகளவில் இருக்கும். இதை தீயணைப்பு துறையினர் வந்து பந்திரமாக மீட்கும் காட்சிகளை அதிகளவில் நாம் செய்திகள் மற்றும் சோசியல் மீடியாக்களின் வாயிலாக பார்த்திருப்போம். இதே போன்ற நிலை தான் இங்கு.,, ஆனால் சற்று வித்தியாசமாக 10 அடி நீளமுள்ள ராட்சத பாரிய மலை பாம்பு ஒன்றை இளைஞர்கள் மீட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் வைரலாக வைரலாக பகிரப்பட்டு வந்த இந்த வீடியோ குறித்து பார்ப்போம்.

மும்பை தானேயில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கிரில் கம்பியில் 10 அடி நீளமுள்ள பெரிய மலை பாம்பு ஒன்று தொங்குவது போன்று வீடியோ ஆரம்பிக்கிறது. அடுக்கு மாடி குடியிருப்பின் ஜன்னலில் வசமாக சிக்கிக்கொண்ட பாம்பை பார்த்த மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்த சூழலில் தான் ஜன்னல் கம்பியில் மாட்டியிருந்த பாம்பை இரண்டு இளைஞர்கள் பத்திரமாக அகற்ற முயன்றனர்.

பாம்பை கீழே விடாமல் அவர்கள் நேர்த்தியாக பாம்பை பிடிக்க கையாண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த வீடியோவை தான் மைக்ரோ பிளாக்கிங் பிளாட்பார்மான ட்விட்டரில் சினேகா என்பவர் பகிர்ந்திருந்தார். அதோடு “மும்பை தானே கட்டிடத்தில் ஒரு பெரிய மலைப் பாம்பை இரண்டு துணிச்சலான நபர்கள் மீட்ட வீடியோ தான் இது எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ நெட்டிசன்களிடம் சிலநாட்களாக வைரலாக பகிரப்படுத்து வருகிறது . இதை பார்த்த ட்விட்டர் யூசர் ஒருவர், பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது என்றும், எப்படி இவர்கள் தைரியமாக பாம்பை பிடிக்க முயன்றார்கள் என் பதிவிட்டிருந்தனர். மேலும் பார்ட்டைமாக தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி இருப்பார்களோ? என்பது போன்ற பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அச்சம், பாராட்டு போன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் ஈமோஜிகளையும் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

Source:news18


 



Post a Comment

Previous Post Next Post