மலேசியாவில் அதிகரிக்கும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இருமடங்கு அதிகரிப்பு

மலேசியாவில் அதிகரிக்கும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இருமடங்கு அதிகரிப்பு

புத்ராஜெயா: மலேசியாவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 6,796 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் 26ஆம் தேதிக்கும் டிசம்பர் 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட இருமடங்காக அது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முந்தைய வாரத்தில் அது 3,626ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோர் உட்பட சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் விகிதம் 100,000 பேருக்கு மூவராக இருப்பதாவும் 100,000 பேரில் ஒருவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் அந்நாட்டுச் சுகாதார அமைச்சு, டிசம்பர் 1ஆம் தேதி குறிப்பிட்டதாக பெர்னாமா கூறியது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை 0.8 விழுக்காடாக இருந்தது எனக் கூறப்பட்டது.

அதேநேரம் ஆபத்தான நிலையில் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இதர நோயாளிகளின் எண்ணிக்கை 1.1 விழுக்காடு எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை மலேசியாவில் புதிய கொவிட்-19 கிருமி திரிபு எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் உள்நாட்டில் பரவும் திரிபுகள் அதிகம் தொற்ற கூடியவை அல்லது தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதற்கானஅறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் சுகாதார அமைச்சு கூறியது.

tamilmurasu


 



Post a Comment

Previous Post Next Post