''பயங்கரவாத தாக்குதல் முதல்.. கடும் வானிலை வரை".. 2024ம் ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகள் - உண்மையா?

''பயங்கரவாத தாக்குதல் முதல்.. கடும் வானிலை வரை".. 2024ம் ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகள் - உண்மையா?


பாபா வங்கா, கடந்த 1996ம் ஆண்டே இறந்தாலும், பார்வையற்ற பல்கேரிய ஆன்மீகவாதியான பாபா வாங்காவின் கணிப்புகள் அவரது மரணத்திற்குப் பிறகு உண்மையாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாபா வாங்கா இப்போது சிலர் மத்தியில் ஒரு வழிபாட்டு நபராக மாறிவிட்டார் என்றே கூறலாம். அந்த நம்பிக்கையாளர்கள் உலகளாவிய நிகழ்வுகள் நடக்கும் முன்பே அவர் முன்னறிவித்தார் என்று நம்புகிறார்கள். 

பால்கனின் நோஸ்ட்ராடாமஸ் என்றும் அழைக்கப்படும் பாபா வங்கா, அமெரிக்காவின் 9/11 பயங்கரவாத தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரெக்ஸிட் போன்ற முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாக கூறப்படுகிறது ஆனால் இதற்கு சரியான சாட்சியங்கள் இருக்கிறதா என்பது சந்தேகமே.

இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டில், அவர் ஏழு தீர்க்கதரிசனங்களைச் செய்துள்ளார் என்று டெய்லி ஸ்டார் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றை பின்வருமாறு காணலாம்.

வெளியான தகவலின்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மீது ஒரு சக நாட்டவரால் கொலை முயற்சி ஏற்படவுள்ளது போல கற்பனை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு "பெரிய நாடு" அடுத்த ஆண்டு உயிரியல் ஆயுத சோதனைகள் அல்லது தாக்குதல்களை நடத்தும் என்று கணித்துள்ளாராம்.

பாபா தனது மூன்றாவது கணிப்புக்காக, அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாராம். கடன் அளவுகள் அதிகரிப்பது மற்றும் அதிகரிக்கும் புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்ற காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளாராம்.

அதே போல அடுத்த ஆண்டு பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்றும் அவர் முன்னறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று, மேம்பட்ட ஹேக்கர்கள் பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைப்பார்கள், இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளாராம். 

அல்சைமர், புற்றுநோய் உள்ளிட்ட குணப்படுத்த முடியாத நோய்களுக்கு, 2024-ல் புதிய சிகிச்சைகள் இருக்கும் என்று பாபா கூறியுள்ளாராம். குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் ஒரு பெரிய திருப்புமுனை இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. பாபா வாங்கா, 1911ல் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா என்ற பெயரோடு பிறந்தார் என்றும், மற்றும் ஒரு பெரிய புயலின் போது தனது 12 வயதில் மர்மமான முறையில் கண்பார்வை இழந்தார் என்றும் கூறப்படுகிறது. சில நாட்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அவளைக் கண்டுபிடித்தபோது, ​​​​அவர் தனக்கு வந்த ஆசிரித்திகள் பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். 

பாபா வாங்கா கணிப்புகள் குறித்த உரிய ஆதாரங்கள் இருக்கின்றதா? இல்லையா? என்பது இன்றளவும் விடையில்லாத மர்மம் தான்.

Source:asianetnews


 



Post a Comment

Previous Post Next Post