Ticker

6/recent/ticker-posts

இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர் யார் தெரியுமா...!

இந்தியாவின் மும்பையில் யாசகம் பெற்று இன்று கோடீஸ்வரர் ஆகியுள்ள ஒரு வர்த்தகர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பாரத் ஜெயின் என்ற யாசகரே அந்த கோடீஸ்வரர் ஆவார். மாதந்தோறும் இந்திய மதிப்பில் 75 ஆயிரம் சம்பாதிக்கும் அவருக்கு தற்போதைய சொத்து மதிப்பு ஏழரை கோடி என தெரிவிக்கப்படுகிறது.

பாரத் ஜெயினுக்கு திருமணமாகி, இரண்டு மகன்கள், மனைவி, சகோதரர், தந்தையுடன் வசித்து வருகிறார். அத்துடன் மும்பையில் 2 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் ஒன்றும் உள்ளது.இது தவிர தானே-வில் இரண்டு கடைகள் வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய். பங்களா ஒன்றையும் கட்டியுள்ளார்.

தனது மகன்கள் கான்வென்ட் பள்ளியில் படித்து வருவதாகவும் பாரத் ஜெயின் கூறியுள்ளார். கோடீஸ்வரராக மாறியதால், யாசகம் பெறுவதை நிறுத்திவிடுமாறு அவரது குடும்பத்தினர் பலமுறை கூறியும், அவர் மறுத்து வருகிறாராம்.

தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த யாசகத்தை விட முடியாது என்கிறாராம் பாரத் ஜெயின். 

ibctamil



 



Post a Comment

0 Comments