
86.வினா : பிறர் வணங்கும் உன்னத நிலை யாருக்குக் கிட்டும்?
விடை : உலகில் வாழும் நெறியுடன் வாழ்பவருக்கு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(50)
87.வினா : ஒருவனுக்கு எல்லாச் சிறப்பும் யாரால் வரும்?
விடை : நற்பண்புமிக்க மனைவியால்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை,(53)
88.வினா : பெண்ணே பெருமைக்குரியவள் எப்போது?
விடை : கற்பென்னும் மனத்திண்மை மாறாத போது
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்.(54)
89..வினா : பெண்களுக்குச் சரியான பாதுகாப்பு எது?
விடை: அவர்களின் மனக்கட்டுப்பாடே ஆகும்
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை,(57)
90.வினா: இகழ்பவர் முன் சிங்கம் போன்ற நடை யாருக்கு இல்லை?
விடை: பண்புடைய மனைவியைப் பெறாதவர்களுக்கு
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.(59)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments