
ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமாக META மெட்டா உள்ளது. இதன் நிறுவனர் மற்றும் சி.இ ஓ. வாக இருந்து வரும் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அமெரிக்காவின் ஹவாயில் உள்ள ஒரு தீவில் ஒரு ரகசிய மாளிகையை கட்டி வருகிறார். அவரது மாளிகை 1400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் ரூ. 2,240 கோடி மதிப்பில் இந்த சொகுசு பங்களா, பதுங்கு குழி, அலுவலகம், விவசாய தோட்டங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. ஜுக்கர்பெர்க்கின் இந்த பங்களா உலகின் மிக விலையுயர்ந்த சொத்துகளில் ஒன்றாக இருக்கும்.
மார்க் ஜுக்கர்பெர்க்கின் ரகசிய பங்களா பல ஆச்சரியமான அம்சங்களை கொண்டுள்ளது. பங்களாக வளாகம் குறைந்தது 30 படுக்கையறைகள் மற்றும் 30 குளியலறைகள் கொண்ட ஒரு டஜன் கட்டிடங்களைக் கொண்டிருக்கும். ஜுக்கர்பெர்க்கின் மாளிகையில் ஒரு பெரிய 5,000 சதுர அடி பதுங்கு குழி உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
இரகசிய பங்களா முக்கியமாக இரண்டு பகுதிகள் அல்லது இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது, மொத்த தரைப்பரப்பு ஒரு கால்பந்து மைதானத்திற்கு (57,000 சதுர அடி) சமமாக உள்ளது. டஜன் கணக்கான லிஃப்ட்கள் இந்த பங்களாவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பங்களாவில் அலுவலகம் மற்றும் கான்பரன்ஸிங் ஹால்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் ரகசிய மாளிகையை கட்டுகின்றனர். இங்கு 2 கட்டிடங்களில் சமையலறை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு உணவு வழங்க முடியும்.
ஜுக்கர்பெர்க்கின் ரகசிய பங்களாவில் விவசாயம் முதல் கால்நடை வளர்ப்பு வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளன. 1,400 ஏக்கர் நிலத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தின் மூலம் பல்வேறு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இப்படி பல சிறப்பு அம்சங்களை கொண்டிருந்தபோதிலும் தனது ரகசிய பங்களா குறித்த தகவல்கள் வெளிவருவதை மார்க் ஜுக்கர்பெர்க் விரும்புவதில்லை. பங்களா குறித்து யாரேனும் ஊடகங்களுக்கு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்கள் நீக்கப்படுகிறார்களாம். சம்பந்தப்பட்ட நபர் தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்தால் அவரை பணி நீக்கம் செய்கிறாராம் ஜுக்கர்பெர்க்.
அடுத்தடுத்த நாட்களில் ஜுக்கர்பெர்க்கின் புதிய பங்களா குறித்த தகவல்கள் மேலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments