
கனவுகளை அடைவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணம் ராஜ்கரன் பராவா. முதுகலை படிப்பில் பட்டம் வாங்க வேண்டுமென்று என்பது ராஜ்கரனை நீண்ட கால ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலை அதற்கு தடையாக மாறியது. எப்படியாவது முதுகலை பட்டத்தை வாங்கிவிட வேண்டுமென்று 25 ஆண்டுகளாக ராஜ்கரன் முயற்சி செய்து வந்துள்ளார். 23 முறை எம்எஸ்ஸி கணிதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்தது, 24 முறையாக தேர்ச்சி அடைந்து 56 வயதில் எம்எஸ்சி பட்டதாரியாகியுள்ளார்.
இவர் போன்ற பலரும் இருந்தாலும், ஒரு சில ஆண்டுகள்தான் முயற்சி செய்வார்கள். ஆனால் தொடர்ந்து பட்டம் வாங்க வேண்டும் என்ற இவரது முயற்சி பலருக்கும் மிகப்பெரிய உதாரணமாக இருக்கும்.
ராஜேந்திரனுக்கு கணிதத்தின் மேல் தனி ஈடுபாடு இருக்கிறது. இதனால்தான் இவர் முதுகலை படிப்பில் கணிதத்தை முதன்மையான பாடமாக தேர்வு செய்தார். ஆனால் குடும்பத்தில் இவருக்கு போதுமான ஆதரவு இல்லை, பொருளாதார ரீதியான பிரச்சினைகள்; பணமில்லாத நிலை; நிலையான வேலையின்மை உள்ளிட்ட பல விதமான பிரச்னைகளால் இவர் பல முறை தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. குறிப்பாக ராஜ்கரன் ஒரு செக்யூரிட்டி பாதுகாவலராக ஒரே நாளில் இரண்டு ஷிப்ட் வேலையை பார்த்து வந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவ்வப்போது பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் இவர் தன்னுடைய டிகிரி வாங்குவதற்காகவும் தீவிரமாக படித்து வந்துள்ளார்
இத்தனை ஆண்டு இவர் மிகவும் கடினமான பல சூழ்நிலைகளை எதிர் கொண்டுள்ளார். ஆனால் சுற்றி இருப்பவர்களே சரியாக புரிந்து கொள்ளாமல் இவரை கேலி செய்துள்ளனர்.
தீவிரமாக முயற்சி செய்தால் அதற்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என்பதை உண்மையாக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு ராஜ்கரன் பாஸ் ஆகி விட்டார். அப்போது கூட அவரால் முழுமையாக வெளிப்படையாக சந்தோஷப்பட்டு கொண்டாட முடியவில்லை. அதற்கு அவர் கூறிய காரணம் வருத்தப்பட வைக்கும் அளவுக்கு இருந்தது.
‘பல ஆண்டுகளாக நான் எம்எஸ்சி தேர்ச்சி பெற வேண்டும் என்று முயற்சி செய்து வந்தது இப்பொழுது நடந்து விட்டது. ஆனால் இந்த மகிழ்ச்சியைக் கூட நான் ரகசியமாகத்தான் கொண்டாட வேண்டும். இதை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது ஏனென்றால் என்னை உதாரணமாக காட்டி தான் என்னுடைய முதலாளிகள் தங்கள் பிள்ளைகளை படிக்க வேண்டும் கூறி வருகின்றனர். அதனால் நான் அவர்களிடம் நான் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று கூறி அவர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். பிறகு வேலையை ராஜினாமா செய்ததாகவும் அதன் பின்னர் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பகிர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு செக்யூரிட்டி கார்டாக ராஜ்கரன் மற்றும் மாதம் ₹5000 மட்டுமே சம்பாதித்து வருகிறார். ஆனால் அவரது தேவைகளுக்கு கூடுதலாக வேறு ஒரு பங்களாவில் உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார். அங்கு அவருக்கு உணவும் தங்குமிடமும் வழங்கப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 2,00,000 ரூபாயை புத்தகங்கள், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு தான் செலவழித்ததாக அவர் தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் கிடைக்கும் சொற்ப பணத்தில் தான் ஏதோ வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என்றும், படிப்பதற்கு செலவு செய்ய கணக்கிட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு ‘யார் என்னை திருமணம் செய்து கொள்வார்கள்’ என்று வேடிக்கையாகச் எதிர் கேள்வி கேட்டார். இத்தனை ஆண்டுகள் எம்எஸ்யில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஒரு ஆசையுடன் தான் அவர் இருந்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments