Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -24


குறள் 1160 
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் 
பிரிவாற்றிப்  பின்இருந்து வாழ்வார் பலர். 

மாணிக்கம்! 
என்னம்மா! 
சிங்கப்பூருக்குப்போயி 
நீங்க எத்தனபேரு 
விருது வாங்குறீங்க? 
இருபது பேரும்மா! 
சரிசரி, மகிழ்ச்சியா 
போயிட்டுவாங்க! 
எல்லாம் தெரியுது 
இருந்தாலும்
இதுவரைக்கும் உன்னப்  
பிரிஞ்சதில்லியா 
அதான்மனசு கலங்குது! 
நீவரவரைக்கும் பொறுமையா 
காத்திருக்கேன்! 
என்னமாதிரி  
பலபேரு 
இங்கஇருக்காங்கல! 

குறள் 1161 
மறைப்பேன் மன்யானிஃதோ நோயை 
இறைப்பவர்க்கு  ஊற்றுநீர் போல மிகும். 

ஒருநாள் 
வீட்டுப்பாடம் செய்யலே  
அம்மா என்னை 
திட்டுதிட்டுதிட்டு  
திட்டிட்டா! 
போம்மா  நா ம் 
கோவிச்சுக்கிட்டேன்! 
இத மத்தவங்களுக்கு 
மறைக்கணும்  நெனக்கிறேன்! 
ஆனால் அதுவோ 
இறைக்க இறைக்க ஊறும் 
ஊற்றுநீர் மாதிரி பெருகுது! 
நம்ம அம்மாதானே  
பக்கத்துல நின்று சிரித்தேன்!
ரெண்டுபேரும் சேந்து சிரிச்சிட்டோம்! 
அந்த அன்புக்கு ஈடாகுமா? 

குறள் 1162 
கரத்தலும் ஆற்றேன்இந் நோயை
நோய் செய்தார்க்கு  உரைத்தலும் நாணுத் தரும். 

அம்மா! 
என்வகுப்புத் தோழி 
பாவையைக் காட்டிலும் 
சென்ற பருவத்தேர்வில் 
நான் அதிக மதிப்பெண் 
வாங்கினேன்! 
அப்பவே அவ சவால் விட்டாம்மா! 
நா ம் இந்தத் தேர்விலே 
அவளைக் காட்டிலும் 
பத்து மதிப்பெண் 
குறைவா வாங்கிட்டேன்! 
அதை மறைக்கவும் முடியல்ல! 
அவகிட்ட தோல்வியச்சொல்ல 
வெக்கமாவும் இருக்கும்மா! 
(தொடரும்)



 



Post a Comment

0 Comments