92 அடி உயர சுனாமி அலைகள் தாக்கும் ஆபத்து… ஆய்வு முடிவால் ஷாக்கில் நியூசிலாந்து மக்கள்!

92 அடி உயர சுனாமி அலைகள் தாக்கும் ஆபத்து… ஆய்வு முடிவால் ஷாக்கில் நியூசிலாந்து மக்கள்!

அழகான தீவு நாட்டை சுனாமி அலைகள் சுருட்டிப் போட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அந்த நாட்டை சேர்ந்த  பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். இதுகுறித்து போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியலாளர்கள் மக்களின் வேலைகளை எளிதாக்கும் ஏராளமான செயல்களை செய்கின்றனர். அவற்றில் ஒன்றுதான் வானிலை மற்றும் புவியியல் முன்னறிவுப்புகள். இதற்காக அவர்கள் ஏராளமான பொருள் மற்றும் நேரத்தை செலவிட்டு ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். வானிலை முன்னெச்சரிக்கைகளால் விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. அதுபோன்ற இன்னொரு இயற்கை அழிவை எவரும் நினைத்து பார்க்க மாட்டார்கள். இந்நிலையில் அழகுமிக்க நியூசிலாந்து நாட்டை 92 அடி உயரம் வரை எழும்பி சுனாமி அலைகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த இயற்கை பேரழிவு சம்பவம் 580 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் செயல்பட்டு வரும் விக்டோரியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள்தான் இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதற்காக பூமியின் சுமார் 30 ஆயிரம் ஆண்டு வரலாறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த  மாதம் 19 ஆம் தேதி இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

news18


 



Post a Comment

Previous Post Next Post