நிமோனியா பரவல்.. நோயுற்ற மாணவர்களுக்காக 'வீட்டுப்பாட மண்டலங்களை' நிறுவிய சீன மருத்துவமனைகள்..

நிமோனியா பரவல்.. நோயுற்ற மாணவர்களுக்காக 'வீட்டுப்பாட மண்டலங்களை' நிறுவிய சீன மருத்துவமனைகள்..

சீனாவில் கடந்த சில நாட்களாக குழந்தைகளிடையே சுவாச நோய்கள் அதிகரித்து வருகிகிறது, பெய்ஜிங் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன. இதை தொடர்ந்து சீனாவில் பரவி வரும் சுவாச நோய்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு விரிவான அறிக்கையை கோரி உள்ளது. எனினும் சீனாவில் புதிய வைரஸ் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்ஃப்ளூயன்ஸா, ரைனோவைரஸ்கள், சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் நுரையீரல் தொற்றுக்கு அறியப்பட்ட மைக்கோப்ளாஸ்மா நிமோனியா போன்ற பாக்டீரியாக்கள் போன்ற வைரஸ்களால் சுவாசக்கோளாறு தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. 

இந்த நிலையில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் குழந்தைகளுக்காக பிரத்யேக "ஹோம்வொர்க் மண்டலங்களை" (Homework Zones) நிறுவியுள்ளன. முகக்கவசம் அணிந்தபடி, மருத்துவமனைகளுக்குள் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வீட்டுப்பாட மண்டலங்களுக்குள் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உதவியோடு படித்து வருகின்றனர்.

இதனிடையே சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவது தொடர்பான பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் மருத்துவனையில் இருக்கும் குழந்தைகள் வீட்டுப்பாடங்கள் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்து. ஜியாங்சு, அன்ஹுய் மற்றும் மத்திய ஹூபே மாகாணங்களில், சிகிச்சையின் போது படிப்பதற்காக குழந்தைகள் மேசைகள் மற்றும் நாற்காலிகள் வழங்கப்பட்ட நிகழ்வுகளை சீன செய்தி தொலைக்காட்சியான CCTV எடுத்துக்காட்டுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு குழந்தையின் தந்தை இதுகுறித்து பேசிய போது "மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் போது அதிகமான பணிச்சுமையைத் தவிர்ப்பதற்காக இந்தக் காலகட்டத்தில் எனது குழந்தை வீட்டுப் பாடத்தை நிர்வகிக்க வேண்டியிருந்தது" என்று தெரிவித்தார்..

ஆனால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது கூட பள்ளிப்பாடம் செய்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோரை விமர்சித்த X சமூக வலைதள பயனர் ஒருவர், "இந்த புகைப்படம் உண்மையானது, மேலும் குழந்தைகள் மருத்துவமனைகளில் வீட்டுப்பாடம் செய்வது சீனாவில் பொதுவானது. நாங்கள் தீவிர கல்வி அழுத்தம் உள்ள நாட்டில் வாழ்கிறோம். என்பது விதிமுறை." என்று தெரிவித்தார்.

asianetnews


 



Post a Comment

Previous Post Next Post