'காசாவின் நிலைமை இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியில் நடந்ததை விட மோசமானது' - ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசப் பொரெல்.

'காசாவின் நிலைமை இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியில் நடந்ததை விட மோசமானது' - ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசப் பொரெல்.

ஹிட்லரின் அட்டூழியத்தை விட பல மடங்கு கொடூரமான அநியாயங்கள் காஸா மக்கள் அனுபவிக்கிகின்றார்கள் 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தூதர்கள், முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் உதவி செய்வதற்கான ஒரே நுழைவுப் புள்ளியான ரஃபா எல்லையை  கடக்கும் எகிப்தியப் பகுதிக்கு விஜயம் செய்தபோது, அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாயிருன்தது.என்றும் உடனடியாக , காசா பகுதியில் போரை நிறுத்துமாறும் வலியுறுத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் பிரதிநிதி சாங் ஜுன், திங்களன்று செய்தியாளர்கள் சந்திப்பில், 'காசாவில் போர் நிறுத்தத்தை எதிர்க்கும் நாடுகளுக்கு ஏதாவது செய்தி இருக்கிறதா என்று கேட்டதற்கு, "போதும் போதும்" என்று கூறினார்.

காசாவின் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் மிகவும்  மோசமான நிலைமையில் வாழ்கின்றனர்.உணவு ,மற்றும் தண்ணீர் இல்லாமல் தினமும் மரணமடைகின்றனர்.மிக மிக மோசமான சுகாதார வசதிகள்.அதிகரிக்கும் தோற்று நோய்கள் என்று மக்கள் சொல்லொண்ணாத் துயோரோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அமேரிக்கா போர் நிறுத்ததிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை உலக நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பெரும்பான்மையான ஐநா உறுப்பு நாடுகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே உடனடி போர் நிறுத்தத்தை ஆதரிக்கின்றன.

வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ,இஸ்ரேல்,காசா யுத்த நிறுத்ததிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததானது,அமெரிக்காவின் இரத்த வெறி இன்னும் ஓயவில்லை என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றது.

வியட்நாமில் ஆரம்பித்த அமெரிக்காவின் இரத்தவெறி ஆட்டம் ,இராக் ,ஆப்கானிஸ்தான் என்று பல மில்லியன் கொலைகளுக்கு பொருப்புதாரிகள் என்பதை உலகம் அறிந்த ஒரு விடயம்.

இன்று காசாவின் இந்நிலைக்கு சூத்திரதாரிகள் அமெரிக்காதான் என்பதை நாம் மறுக்க முடியாது.

ஆயுத வியாபாரதிற்காக மக்களை கொண்டு குவிக்கின்ற இந்த கொடூர மிருகங்கள்.இனியும் தப்ப முடியாது. 

பாலஸ்தீன மக்களை கொலை செய்வதற்கு,இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்கா, ஜனநாயகம் என்ற போர்வைக்கும் ஒரு வெறிபிடித்த ஆட்டதை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் ஆதரவுடன் 
நடந்த போர்களில் கொலை செய்யப்பட்டவர்களைப் 
பற்றிய ஒரு சிறு தகவல்;

போர் மற்றும் அதன் பின்விளைவுகள் பற்றிய சில முக்கிய புள்ளி விவரங்கள் இங்கே:

 2003 முதல் 2012 நிதியாண்டுகள் வரை ஈராக் போருக்கு அமெரிக்கா $728 பில்லியன்: நேரடியாகசெலவிட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் 2021 வரையிலான நிதியாண்டுகளில் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் நடந்த போர்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகை $1.6 டிரில்லியன். 

ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை.
4,492.

ஈராக்கில் காயமடைந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை. 32,292

போரில் கொல்லப்பட்ட ஈராக் குடிமக்களின் எண்ணிக்கை.
(தோராயமாக) 200,000: (nbcnews)

வியட்நாம் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3.8 மில்லியன். 
(google)

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்  இஸ்ரேல் ,ஹமாஸ்  போரில் பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அதிகமான குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்படி உலகம் முழுவதும் பல உயிர்கள் பலியாகியதற்குக் காரணமாயிருக்கும்  அமெரிக்காவை இனியும் படைத்தவன் விட்டு விடுவானா?



 



Post a Comment

Previous Post Next Post