துப்பாக்கி சுடுவதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிடும் இந்திய ராணுவம்?

துப்பாக்கி சுடுவதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிடும் இந்திய ராணுவம்?

இந்திய ராணுவம் வலுவாக மாறி வருவதை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது. இந்த சூழலில் மேம்பட்ட ராணுவ கட்டமைப்பு உருவாக்க புதிய சோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, எந்த ஒரு ராணுவ வீரரையும் துப்பாக்கி சுடும் திறன் படைத்தவராக மாற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கான சோதனை முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளதாக ராணுவ தலைமை டிசம்பர் 10 அன்று ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்திருந்தது.

பொதுவாக, துப்பாக்கிச் சூடுவதில் உள்ள துல்லியத்தன்மை ராணுவ வீரர்களுக்கு இடையே மாறுபடும். ஆனால் புதிய செயற்கை நுண்ணறிவு கருவியானது துல்லியமாக குறிவைத்து சுடுவதற்கு ராணுவ வீரர்களை பரிந்துரைக்கும் என்று லெப்டினன்ட் கர்னல் நிபுன் சிரோஹி என்டிடிவியிடம் பேசும்போது கூறியுள்ளார்.

“நாங்கள் அதை 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் வரம்புகளில் சோதனை செய்து வருகிறோம். அதில் 80 முதல் 90 விழுக்காடு துல்லியத்தை இதுவரைக் கண்டறிந்துள்ளோம். இது எந்த ஒரு ராணுவ வீரரையும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக மாற்றும் திறன் கொண்டது” என்றும் அவர் கூறினார். இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட் ஸ்கோப் என்று அழைக்கப்படுகிறது. இத எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கிய லெப்டினன்ட் கர்னல் சிரோஹி, இலக்கு ரேடாரில் இருக்கும் போது துப்பாக்கி சுடும் வீரரை எச்சரிக்க AI அல்காரிதம் மற்றும் சென்சார் தரவைப் பயன்படுத்துகிறது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இது ஒரு இலக்கை கண்டுபிடித்து ஒரு சிவப்பு எல்லையை உருவாக்குகிறது. பின்னர், LRF (லேசர் ரேஞ்ச் ஃபைண்டர்) உடன் இணைக்கப்பட்ட கேமரா துப்பாக்கியில் பொருத்தப்பட்டுள்ளது.

இவை இலக்கைக் கண்காணிக்கிறது. சிவப்பு எல்லைக் குறியீடு பச்சை நிறமாக மாறியதும், துப்பாக்கிச் சூடு நடத்த இது சரியான நேரம் என்று ராணுவ வீரருக்கு சமிக்ஞை கிடைத்தது,” என்று விளக்கமளித்தார். எல்லைகளில் ஸ்மார்ட் ஸ்கோப்பைப் பயன்படுத்த முடியுமா என்று கேட்டதற்கு, “ஆம், இது பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அதைப் பயன்படுத்தி ‘ஒரு ஷாட்-ஒன் ஹிட்’ திறனை நாம் அடைய முடியும்” என்று ராணுவ தலைமை அலுவலர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும் இந்த கருவிகள் நெருக்கடியான போர் சூழல்களில் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்த லெப்டினன்ட் கர்னல் சிரோஹி, எனினும், தற்போது ஸ்மார்ட் ஸ்கோப்பை பகல்நேர துப்பாக்கிச் சூடு திறனை மேம்படுத்த மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இதில் கொடுக்கப்பட்டுள்ள கேமராவில் 50 மிமீ லென்ஸ் மற்றும் 30 எக்ஸ் ஜூம் உள்ளது. இது எதிர்காலத்தில் இரவு நேர துப்பாக்கிச் சூட்டிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

news18


 



Post a Comment

Previous Post Next Post