Ticker

6/recent/ticker-posts

ஹமாஸ் அதிரடி தாக்குதல் : இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு


வடக்கு காசா பகுதியில் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் படையினர் ஒரு நாளில் மட்டும் பெரும் உயிரிழப்பை சந்தித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதலில் ஒரு அதிகாரி உட்பட பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் படையினரை திடீரென ஹமாஸ் அமைப்பினர் சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலிலேயே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்தவேளை குறித்த படையினருடனான தொடர்பை இழந்துள்ளதாகவும் இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்த படையினரின் விபரத்தையும் இஸ்ரேல் படையினர் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதல்களில் 350 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

ibctamil


 



Post a Comment

0 Comments