பள்ளிவாசல் காணித் திருட்டில் கையும் களவுமாக மாட்டி மூக்குடைந்து போன ஜமீயதுல் உலாமாவின் செயலாளர் தொடர்ந்தும் பதவியில் !

பள்ளிவாசல் காணித் திருட்டில் கையும் களவுமாக மாட்டி மூக்குடைந்து போன ஜமீயதுல் உலாமாவின் செயலாளர் தொடர்ந்தும் பதவியில் !


சவுதி அரேபியாவை சேர்ந்த தனவந்தர் ஒருவரால் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பள்ளிவாசலாக வாங்கி அன்பளிப்பு செய்யப்பட்ட, சுமார் 50 கோடி ரூபாய் பெருமதி வாய்ந்த 80  பேசஸ் காணியை விற்பனை செய்ய , ஜமீயத்துல் உலமாவின் செயலாளர் ஒருவரும், சில உலமாக்களும், இதன் பங்காளித் திருடர்களாக மேலும் சில முஸ்லிம் சட்டத்தரணிகளும் கூட்டு சேர்ந்து, பள்ளிவாசல் சொத்தை அபகரிக்க முற்படும் செய்திகள் அண்மையில் வெளியாகின. 

2002 ஆம் ஆண்டு வாங்கி, அதே ஆண்டில் பள்ளிவாசலாக தனவந்தர்  பாபக்கர் அவர்களால் தெஹிவளை  நகர சபையில்  பதிவு செய்யப்பட்ட இந்த இடத்தை,   2003 ஆம் ஆண்டு அல்லது அதன்பின்னர் திருட்டுத்தனமாக நகர சபையில் தங்கள் பெயர்களுக்கு இதை மாற்றிப் பதிவு செய்துள்ளனர்.

பின்னர் இதை விற்பனை செய்ய முயற்சி செய்ததின் காானணமாக 2012 ஆம் ஆண்டு ஜமியத்துல் உலமாவின் உறுப்பினராக இருந்து தற்போது ஒரு  செயலாளர் பதவியை வகிக்கும் சர்ச்சைக்குரிய  ஜம்மியத்துல் உலமாவின் செயலாளரை பள்ளிவாசலுக்கு வரவழைத்து மக்கள் சிறை படுத்தியதுடன் தாக்கவும் முற்பட்டனர். இதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அவ்விடத்தில் அல்லாஹ்வை முனவைத்து சத்தியம் செய்து தப்பிச் சொன்றார். 

பதிவு செய்யப்படாத இப்பள்ளி வாசல், 2012 ஆம் ஆண்டு இனவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான போது பள்ளிவாசல் விடயத்தில் தலையிட்ட அப்போதைய  அமைச்சர்களான ரிஷாட் பதுருதின், பவ்ஸி,  முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில், இதன் பதிவிற்காக ஒரு வாரங்களில் ஆவணங்களை கையளிப்பதாக மீண்டும் வாக்குறுதி கொடுத்து திரும்பவும் கொடுத்த வாக்குறுதிக்கு மாற்றம் செய்தனர்.

பின்னர் இதை விற்பனை செய்வதற்காக 2015 ஆம் ஆண்டு போலியான எடோனிபவர் ஒன்றையும் தயார் செய்து,  அதே ஆண்டில் விற்பனை செய்வதற்கான அறக்கட்டளை ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்ய முயற்சிகள் செய்தனர்.

இதிலும் பெரிய ஜேக் இந்த இடத்தை அபிவிருத்தி செய்ய இதன் ஒரு பகுதியை வட்டிக்கு அடகுவைக்க, அல்லது  கைமாற்ற, அல்லது  விற்பனை செய்ய முடியும் என எழுதி வைத்திருந்தனர். பள்ளிவாசலைக் கட்ட பள்ளிவாசல் காணியின் ஒரு பகுதியை விற்பனை செய்வது   முதல் உலக சாதனை இதுவாகும். ஒரு சான் நிலமும் கோடிக்கணக்கில் பெருமதி வாய்ந்த இடத்தில், கோடிக்கணக்கில் செலவு செய்து பள்ளிவாசலை கட்ட மக்கள் வரிசையில் நிற்கும் போது காணியின் ஒரு பகுதியை விற்று பள்ளிவாசல் கட்ட போரார்களாம் !

எனவே பொதுமக்கள் இதற்காக வழக்கு தொடர்ந்து, அண்மைக்காலமாக  இவ்விடயத்தை சமூகமயப்படுத்தவே அகில இலங்கை ஜெமியத்துல் உலமாவின் சங்கைக்குறிய  தலைவரும், மற்றும்  சில உயர் பதவி வகிப்பவர்களும்  பள்ளிவாசலும் அதன் காணியும் வக்பு செய்யப்பட வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து வக்பு செய்வதாக அவர்களிடமும் வாக்குறுதி அளித்துவிட்டு அவர்களுக்கும் கம்பி நீட்டினார்கள். 

இதைத் தொடர்ந்து இவ் ஆவனங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் CID போன்றவற்றின் மூலமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவே சாரப்பாம்பின் மீது மண்ணெண்ணெய் ஊற்றியது போல் குழப்பமடைந்தனர்.

அதனை அடுத்து சவுதி அரேபியாவுக்கு ஓடிச் சென்று,  தாம் தனவந்தர் பாபக்கர் அவர்களை சந்தித்ததாகவும், அவரின் அனுமதிப்படி,  பாபக்கர் அவர்களின் கையெழுத்துடனான உண்மையான ஆவணங்களை  தயாரித்துள்ளதாகவும், பாபக்கர் அவர்கள் கையொப்பமிடுவதான  ஆவணங்களையும், வீடியோக்களையும், பள்ளிவாசலை பதிவு செய்வதற்காக,  இது உண்மையான  ஆவணங்கள் என வக்பு சபையிடம் கையளிததுள்ளதாக  ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதனை விற்பனை செய்ய முடியாது என்ற அறக்கட்டளை ஒன்றும் இதன் மீது எழுதப்பட்டுள்ளதாகவும், இதனை நிறைவேற்றுவதற்காக இவர்களுக்கு மீண்டும் ஒரு  எடோனிபவர் பாபக்கர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றன. இத்தகவல்களில் சிலவற்றை கடந்த  திங்கட்கிழமை பொதுமக்கள் வக்பு சபையினரை சந்தித்தபோது அவர்களும் உறுதிப்படுத்தி இருந்தனர்.

அவ்வாறாயின் இவர்கள் முதல் வைத்திருந்த எடோனிபவர், இதனை விற்பனை செய்ய, வட்டிக்கு அடகு வைக்க முடியும் என எழுதி வைத்திருந்த அறக்கட்டளை அனைத்தும் போலியானவை என இதனால் நிரூபணமானது.

இது தொடர்பான பிரச்சனையை முடித்து ஒரு மாதத்திற்குள் மக்களுக்கு பள்ளிவாசலை பதிவு செய்து கொடுக்கும்படி நீதிமன்றம் கட்டளை இட்டிருந்தும்,  நீதிமன்றத்தின் கட்டளையை மீறி இதை பள்ளிவாசலாக பதிவு செய்யாமல் வக்பு சபையும் கலாச்சார அமைச்சும் இழுத்தடிப்புச் செய்தது.

மீண்டும் ஒரு ஆவணங்களை இவர்கள் தயாரிக்கும் விதமாக இழுத்தடித்து கால அவகாசத்தை இவர்களுக்கு வழங்கி, மாட்டிய திருட்டில் இருந்து இவர்கள்  தப்பிச் செல்ல பள்ளிவாசல் பதிவில் சம்பந்தப்படும்  இரு நிறுவனங்களிலும் சில அதிகாரிகள் இவர்களுக்கு உதவி செய்தனர். அத்தோடு இது சம்பந்தமாக பொது மக்களால் வழங்கப்பட்ட ஆவணங்களையும் அபகரிப்பாளர்களிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இச்சொத்தை விற்பனை செய்ய முடியாது. இவை பள்ளிவாசலுக்கு சொந்தமானவை, தனி மனித அதிகாரத்தின் கீழ், அல்லது ஒரு நிறுவனத்தின்  அதிகாரத்தின் இல்லாமல், மக்களால் பராமரிக்கப்படும் சுதந்திரமான ஒரு பள்ளிவாசலாக இயங்க வாய்ப்பளித்து எழுதப்பட்டிருந்தால் அவை வரவைக்கத்தக்கது. அதற்கான எந்த எதிர்ப்பும் நம்மிடம் இல்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் முழு காணியையும் கைப்பற்ற முடியாமல் போன காரணத்தினால் இப்பள்ளி பள்ளிவாசலை விடுத்து, மீதமிருக்கும் காணியை கைப்பற்றுவதற்கான திட்டங்கள் இவர்களிடம் பின்பு  இருந்ததினால், அவை பற்றி மிகக் கவனத்துடன் செயற்படுவதாகவும், சரியான ஆவணங்களை தயாரித்த இவர்கள், பாபக்கர் அவர்களிடம் எந்த விதமான பொய்களைச் சொல்லி இந்த இடத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை கைப்பற்றும் நோக்கம்,  அல்லது அவ்வாறான வகையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இருந்தால், அதற்கான கடும் நடவடிக்கைகளில் இறங்குவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஏனெனில் இலங்கையின் தலை நகர் பகுதியில் பள்ளிவாசல் கட்ட முடியாது, அவ்வாறு பள்ளிவாசல் கட்டுவதை இலங்கை  அரசு தடை செய்துள்ளது என்ற போலியான ஒரு தகவலை பாபக்கர் அவர்களுக்கு வழங்கியிருந்ததையும், ரியாத் நகரின் பாபக்கர் அவர்களின் காரியாலயத்திற்கு இப்ப பள்ளிவாசல் விடயமாக விஜயம் செய்த தெஹிவளையைச் சேர்ந்த  ஒரு சகோதரரிடம் அவர்கள் தெரிவித்திருந்ததையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வக்பு சபையிடம் கையளித்த இவ்ஆவனமே சபையில் கையளித்த போது சபையில்  இருந்து திருட்டுப் போனது.

எவ்வாறாயினும் இந்த முழு இடமும் பள்ளிவாசலுக்குச் சொந்தமான  இடமாகவும், பாபக்கர் அவர்களின் வஸீயத்படி அவர் ஆசைப்பட்ட ஏனைய  விடயங்களும் பள்ளிவாசலின் கீழ் நடைபெறக்கூடிய இடமாகவும்  நடைபெறுவதை தவிர, எந்தவிதமான செயற்பாடுகளுக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, இவர்களின் எந்த செயற்பாடுகளையும் ஒரேயடியாக நம்பவே ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவர்கள் பள்ளிவாசல் கணியை 23 வருடங்களாக மறைத்து வைத்து 80  வீடுகள் கொண்ட ஏபாட்மன்ட் ஒன்றை கட்டி அதில் ஒரு தொழுகையறையை ஏற்படுத்தி விட்டு 50 வீடுகளை எபார்ட்மெண்ட் கம்பெனிக்கும் 30 வீடுகளை தமக்குள் பகிர்ந்து கொள்ள திட்டம் தீட்டியவர்கள். உலமாக்கள் என்னும் காவலரன்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் வேஷதாரிகள் எனவும் தெரிவித்தனர்.

மேலும் இது சம்பந்தமானஅத்தனை விளக்கங்களும் அடங்கிய கடிதம் ஒன்றை அகில இலங்கை ஜமீயத்துல் உலமாவிடம் கடந்த 10. 11. 2023 அன்று பொதுமக்கள் கையளித்தனர். இதற்கு அமைய 17.11. 2023 மாலை  4 மணிக்கு பொதுமக்கள் ஜமீயதுள்உலமா பிரதிநிதிகளை  சந்தித்தனர். இச் சந்திப்பு மாலை 5.30 மணிவரை நீடித்த போதிலும், இதுவே போதும் என்றும் இனியும் பார்க்க ஒன்றுமில்லை அத்தனையுமே களவு தான் என அவர்கள் ஒத்துக்கொள்ள 5.30 மணிக்கு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

இதன் பிரகாரம் சர்ச்சைக்குரிய செயலாளர்  பதவியில் இருந்தும், நிறைவேற்று குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் சர்சைக்குறிய செயலாளரை நீக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டிக்கொண்டனர்.

இதற்கமைய எதிர்வரும் 15  ஆம் திகதி வரை கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும்,  அதுவரை பொறுத்திருக்கும் படியும் அகில இலங்கை ஜமீயத்தில் உலமாவின் உயர் பிரதிநிதிகள் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

எதிர்வரும் 15 ஆம் திகதி பிரச்சினை முடிந்ததோ இல்லையோ, பள்ளிவாசல் சொத்துக்களை அபாகரிக்க முற்பட்டு, மக்களால் அசிங்கமானவர்களாக நோக்கப்படும், ஆயிரம் முறை அல்லாஹ் மீது சத்தியமிட்டு, தான் இருக்கும் இடத்தின் தலைமைத்துவத்துக்கே துரோகம் செய்து, ஒரு பள்ளிவாசல் ஒன்றிற்காக பொதுமக்களை பல லட்சங்கள் செலவு செய்ய வைத்து, நீதிமன்றங்கள் என சித்திரவதை செய்தவரை,  மக்களை வழிநடத்தும் சபையில் தொடர்ந்தும் வைத்திருக்கலாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் நடுநிலையாக சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். 

அவ்வாறு இல்லாத பட்சத்தில், இது விடயத்தில் தீர்ப்பு சொல்ல வேண்டியவர்கள் மக்கள் முன் எந்த விதமான வழிநடத்தல்களுக்கும் தோன்றாமல் இருப்பதே முறையானதாகும்.

இது சம்பந்தமாக வக்பு சபை,  ஜமீயத்துல் உலமாபோன்றவற்றின் முன்பாக மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் தெஹிவளை மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்த இருந்த போதிலும்,  ஜமீயத்துல் உலமாவின் சில மூத்த உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவை இடை நிறுத்தப்பட்டது. ஆனால் 80 பேச் காணியும் பள்ளிவாசல் சொத்தாக வக்பு செய்யப்பட வேண்டும் எனவும்,  இவர்கள் திட்டம் தீட்டி இருந்ததின் பிரகாரம்,  இதன் பள்ளிவாசல் பகுதியை மட்டும் வக்பு செய்து ஏனைய பகுதியை கைப்பற்றும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

அவ்வாறு செய்யப்பட்டிருந்தால்  தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவிற்கு பின்பு அகில இலங்கை ஜமீயத்துல் உலமா,  வக்பு சபை, கலாச்சார அமைச்சு, ஆகியவைக்கு முன்பாக  ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும், இப்பள்ளி வாசலுக்காக வாரத்தில் ஒரு நாளை தாம் ஒதுக்க தயாராக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் அண்மையில் இந்த இடத்தின் பிரச்சினை சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய தெஹிவளை,   ரத்மலானை மஸ்ஜிதுகளின் சம்மேளனம், இந்த இடத்தில் பள்ளிவாசலும் அவை சார்ந்த செயல்பாடுகளும் இல்லாத எந்தக் கட்டிடங்களும் எபார்ட்மென்ட்களும் கட்ட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும். அவ்வாறு செயல்படுவார்களாயின்,அனைத்து மஸ்ஜிதுகளையும், மக்களையும் ஒன்றிணைத்து இதற்கு எதிராக செயல்படுவது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

பேருவளை ஹில்மி



 



Post a Comment

Previous Post Next Post