மனித நேயம் மிக்க ஒரு மனிதர் உலக பெளத்த மஹா சம்மேளன இலங்கை நிறுவனத்தின் அதிபராகிய, திரு சுதத் தேவப்புர அவர்கள்

மனித நேயம் மிக்க ஒரு மனிதர் உலக பெளத்த மஹா சம்மேளன இலங்கை நிறுவனத்தின் அதிபராகிய, திரு சுதத் தேவப்புர அவர்கள்

கோவிட்(19) தொற்று பரவி உலகெங்கும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.உலக மக்கள் சொல்லொண்ணாத் துன்பத்தை அனுபவித்த காலகட்டம் அது.

கோவிட்(19) தொற்று எமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை.இலங்கை மக்கள் மிகப்பெரும் துன்பத்தை அனுபவித்த அந்த நாட்களை இன்றளவும் நாம் மறக்க முடியாது.

கோவிட்(19) தொற்று காலத்தில் மனித நேயம் மிக்க ,ஜாதி மதம் பார்க்காத,ஏற்றத்தாழ்வுகள் பார்க்காத ஒரு சில நல்லுள்ளம் கொண்ட மனிதர்களை நாம் கண்டோம்.அவர்கள் செய்த சேவைகள் அளப்பரியது.

ஒருசிலர் மாபெரும் உதவிகளை ரகசியமாக  செய்துவிட்டு  அமைதியாக இருந்துவிடுவார்கள்.அப்படிப்பட்ட ஒரு மனிதர்தான் 
உலக பெளத்த மஹா சம்மேளன  இலங்கை நிறுவனத்தின் அதிபராகிய, திரு சுதத் தேவப்புர அவர்கள். 

காலம் கடந்து இந்த விபரங்கள் எனக்குக் கிடைக்கப் பெற்றாலும் , பெருமைக்குரிய அந்த மனிதருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்துடன்,கொவிட் தொற்றுக் காலத்தில் முஸ்லிகள் சந்தித்த மிக முக்கியமான ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் , அன்றைய ஜனாதிபதி மாண்புமிகு திரு கோடாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு உலக பெளத்த மஹா சம்மேளன  இலங்கை நிறுவனத்தின் அதிபராகிய, திரு சுதத் தேவப்புர அவர்கள்  எழுதிய கடிதத்தை இங்கே வெளியிட்டு இலங்கை வாழ் முஸ்லிகளின் சார்பில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது முஸ்லிம் சமுதாயத்தின் மதக் கலாசாரங்களை மதித்து மனித நேயத்தின் பெயரால் செய்து காட்டிய இவ்அர்ப்பணிப்பை 
மதித்து முஸ்லிம் சமுதாயத்தின் நன்றியினை முன்வைக்கின்றோம்.

இவ்வண்ணம்
M.H.M நியாஸ்
தெஹிவல.

முன்னைநாள் ஜனாதிபதி மாண்புமிகு திரு கோடாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு உலக பெளத்த மஹா சம்மேளன  இலங்கை நிறுவனத்தின் அதிபர், திரு சுதத் தேவப்புர அவர்கள்  எழுதிய கடிதம்.(சிங்களம்) 




கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு 

உலக பெளத்த மகா சம்மேளனம் _ இலங்கை நிறுவனம்

2020/12/29.

மாண்புமிகு ஜனாதிபதி
திரு கோடாபய ராஜபக்க்ஷ
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு -01.

கெளரவ ஜனாதிபதி அவர்களே....!
(கோவிட் வைரஸ் தாக்கத்தின் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸா க்களை அவர்களது மதக்கிரிகைகளுக்கு அமைவாக நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி  வழங்குமாறு வேண்டிக்கொள்வது தொடர்ப்பாக)

மேலே குறிப்பிட்ட வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் அனைவருக்கும் தத்தமது மதக்கிரிகைகளுக்கு அமைவாக அவைகளை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தத்தமது மதக்கிரிகைகளுக்கு அமைவாக உயிரிழந்த உறவுகளை நல்லடக்கம் செய்வதென்பது உயிர் வாழும் உறவினர்களுக்கு பெறும் ஆறுதலான அம்சமாகும்.

அவ்வாறில்லை எனில் உயிர்வாழும் உறவுகளுக்கு அது மிகவும் துக்ககரமான அம்சமாக அமைந்துவிடும் என்பதை தெரியபடுத்துகிறேன்.

மேலும்   பெளத்த ,  கத்தோலிக்க , ஹிந்து  மற்றும் முஸ்லிம் ஆகிய அனைத்து மதத்தவர்களுக்கும் தத்தமது மத கலாசாரங்களை பேணி இறுதி சடங்குகளை செய்வதற்கு அனுமதி வழங்குவதானது மிக நன்மையான விடயமாகும் என்பதனை குறிப்பிடுவதோடு
விஷேடமாக முஸ்லிம் சமூகம் தமது  உறவுகளின் ஜனாஸாக்களை எறிக்கும் விடயம் சம்பந்தமாக மிகுந்த கவலைக்கும் , வேதனைக்கும் ஆலாக்கப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக சகல இனத்தவர்களுக்கும் தத்தமது மதக்கலாசார அனுஷ்டானங்களுக்கு அமைவாக தத்தமது உறவுகளின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மிக விணயமாக வேண்டுகிறேன்.

நன்றி
இவ்வண்ணம்
சுதத் தேவப்புர 
தலைவர்
உலக மகா பெளத்த சம்மேளனம்
இலங்கை நிறுவனம் .


 



Post a Comment

Previous Post Next Post