Ticker

6/recent/ticker-posts

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்; நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி... பதைபதைக்க வைக்கும் காட்சி

சீனாவின் கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று (டிசம்பர் 19)  தாக்கியது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கன்சு மாகாண தலைநகரான லான்ஜோவிலிருந்து 102 கிமீ மேற்கு-தென்மேற்கில் 35 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 11.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.  நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
தவிடுபொடியான கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 230க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளில் ஈடுபட உடனடியாக அவசர மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். சீனாவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்சு, கிங்காய் ஆகிய வடமேற்கு மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவுத் சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமாக சின்ஹுவா கூறியுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவு மட்டும் வெவ்வேறு இடங்களில் 3 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 9 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் கிழக்கு பகுதிகளில் ரிக்டர் அளவில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 23 பேர் காயம் அடைந்தனர். 1900களில் 200 கி.மீ. ஆழத்துக்குள் 6 ரிக்டர் அளவுக்கு மேல் சீனாவில் ஏற்பட்ட 3 மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

news18


 





Post a Comment

0 Comments