இஸ்ரேலுக்கு வந்து குவியப்போகும் ஆயிரக்கணக்கான அமெரிக்க டாங்கிகள்

இஸ்ரேலுக்கு வந்து குவியப்போகும் ஆயிரக்கணக்கான அமெரிக்க டாங்கிகள்


காசா பகுதியில் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 14 ஆயிரம் போர்த் டாங்கிகளை அமெரிக்கா அனுப்பவுள்ளது.

கடந்த ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்ட ஹமாஸ் அமைப்பு 1400 ற்கும் மேற்பட்டவர்களை கொன்று 250ற்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது.

இதனையடுத்து அன்றிலிருந்து இன்றுவரை காசாமீது இஸ்ரேல் படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இதில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும் பெருமளவானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) அனுமதி இல்லாமல், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் இஸ்ரேலுக்கு 14,000 டாங்கிகளை விற்க தயாராகி வருகிறது.

இதை அமெரிக்க போர் துறை அல்லது பென்டகன் வெளிப்படுத்தியது. ஒப்பந்தம் பென்டகன் வழியாக செல்கிறது.

பைடன் நிர்வாகம் எடுத்த அவசர முடிவின்படி இந்த டாங்கிகளின் விற்பனை நடைபெறும். இதன் மதிப்பு 106.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post