
மொத்தம் 39 மனைவிகள், 94 பிள்ளைகள் மற்றும் இவர்களுடைய வாழ்க்கை இணையர்கள், 36 பேரக்குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக ஸியோனாவின் குடும்பத்தில் 199 பேர் உள்ளனர். இரட்டை சதம் அடிப்பதற்கு இன்னும் ஒரு எண்ணிக்கை மட்டுமே மீதமுள்ளது எனினும், சோகமான விஷயம் என்னவென்றால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற உடல் உபாதைகளால் கடந்த 2021ஆம் ஆண்டு 76ஆவது வயதில் அவர் மறைந்துவிட்டார். முன்னதாக, தான் வாழ்ந்த காலத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான அன்பு, நம்பிக்கை வைத்திருந்தார் ஸியோனா. அனைவரிடமும் ஒற்றுமையை கடைப்பிடித்து வந்தார்.
ஸியோனாவின் பின்னணி என்ன
ஸியோனா, ஸனா என்னும் இனக்குழு குடும்ப வகையைச் சேர்ந்தவர். இந்த இனக்குழுவை இவரது தந்தை கடந்த 1942ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். முதன் முதலில் இவருக்கு 17 வயதில் திருமணம் ஆனது. அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 17 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். ஸியோனா எப்போதுமே தன்னை சுற்றியிலும் 7 அல்லது 8 மனைவிகள் உடன் இருப்பதை விரும்பினாராம்.
ஒரே வீடு
இவ்வளவு பெரிய குடும்பத்தை வழிநடத்திய ஸியோனா, அதற்கேற்ற இடவசதிகளை செய்யாமல் இல்லை. இவர்களுடைய குடும்பம் வசிப்பதற்காக மட்டும் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பு இருக்கிறது. அதில் மொத்தம் 100 அறைகள் உள்ளன. மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டை பார்த்தால் ஏதோ அடுக்குமாடி குடியிருப்பு போன்றும், அங்கு 10, 15 குடும்பங்கள் வசிப்பது போலவும் தோற்றமளிக்கும்.
கடந்த 2011ஆம் ஆண்டில் ராய்டர்ஸ் ஊடக நிறுவனத்திற்கு ஸியோனா அளித்த பேட்டியில், “என் குடும்பம் மிகப் பெரியதாக இருந்தாலும், அதை இன்னும் மாபெரும் குடும்பமாக வளர்த்தெடுக்க நான் விரும்புகிறேன். இந்த இலக்கை அடைவதற்காக இன்னும் கூடுதலாக திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments