திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -25

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -25


குறள் 1163 
காமமும் நாணும் உயிர்காவாத் 
தூங்கும்என்  நோனா உடம்பின் அகத்து. 

அப்பா! 
வர்ர பத்தாம்தேதி 
எனக்குப் பிறந்தநாள்!
சிறப்பா கொண்டாட 
ஏற்பாடு செய்றீங்க! 
அதே நாள்ல 
பள்ளிக்கூடத்துல 
இன்பச் சுற்றுலா போறாங்க! 
அதுக்கு 
வரமாட்டே  சொல்ல 
நட்புதடுக்குது! 
பிறந்தநாள் கொண்டாட 
மனசுதவிக்குது! 
காவடிபோல 
ரெண்டுபக்கமும் 
ஊசலாடுதுப்பா! 

குறள் 1164 
காமக் கடல்மன் ம் உண்டே 
அதுநீந்தும் ஏமப் புணைமன் ம் இல். 

பக்கத்து வீட்டுக்கு 
புதுசா குடிவந்திருக்காங்க! 
மூணாவது படிக்கிற  
பொண்ணு ஒன்  இருக்கு! 
அவளோட பழகலாம்  
நெருங்கிப்போனா 
விலகிவிலகிப் போறா! 
ஆனா ஏம்மனசோ ஏங்குது! 
நட்பு கடலலை போல சூழ்ந்து வருதே! 
இதை நீந்திக் கடப்பதற்குத் 
தோணியும் இல்லையே!

குறள் 1165:  
துப்பின் எவனாவர் மன்கொல் 
துயர்வரவு  நட்பி ள் ஆற்று பவர். 

அம்மா! 
பள்ளிக்கூடத்துல 
என்னோடவே 
இருக்குற 
அமுதா,  
பள்ளிக்கூடம்விட்டு 
வெளியவரும்போது 
இன்னொருத்தியோட 
போறாம்மா! 
உயிருக்குயிரா 
நட்புல இருக்கும்போதே 
இப்படிப் பிரிஞ்சி்ப் 
போறாளே 
இவள்ளாம் பகையாளியா 
இருந்தா என்னசெய்வாளோ! 
தெரியலம்மா! 

குறள் 1166:  
இன்பம் கடல்மற்றுக் காமம் 
அஃதடுங்கால்  துன்பம் அதனிற் பெரிது. 

அக்கா! 
பள்ளிக்கூடத்துல 
தோழிகளோட
பேசிப்பழகி 
விளையாடி இருக்குறவரைக்கும் 
மகிழ்ச்சியும் சிரிப்பும் 
கடல்போல கரைபுரளுது! 
பிரிஞ்சு 
வீட்டுக்கு வந்தா 
இந்தமனசு  
துன்பத்துல வாடித் 
துடிக்கிறதும் கடலளவு இருக்குதே. தவிப்பு 

குறள் 1167:  
காமக் கடும்புனல் நீந்திக் 
கரைகாணேன்  யாமத்தும் யானே உளேன். 

அம்மா 
திடீர் மயக்கம் 
போட்டாங்க! 
மருத்துவமனையில 
அப்பா  
அம்மாவோட இருக்காரு! 
தாத்தா பாட்டி 
என்ன பாத்துக்குறாங்க! 
அம்மாவுடைய 
அன்புக் கடல்ல 
நீந்தி இன் ம் 
கரைசேரல! 
இந்த நள்ளிரவில்கூட 
தனிமை உணர்ச்சில 
தவிச்சுக்கிட்டிருக்கேன்!

((தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post