வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-19

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-19


91.வினா : மங்கலம் என்பது எது?
விடை : குடும்பத்திற்கு மங்கலமாகத் திகழ்வது நல்ல மனைவியே
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று.அதன் நன்கலம் நன்மக்கட் பேறு.(60)

92.வினா : பெறவேண்டிய பேறுகளில் சிறப்புடையது எது?
விடை : அறிவு நிறைந்த மக்களைப் பெறுவதே ஆகும் 
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.(61)

93.வினா : யாருக்கு பழியும் தீமையும் வராது?
விடை : நற்பண்புமிக்க மக்களைப் பெற்றவருக்கு 
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்(62)

94.வினா : அமிழ்தினும் இனியது எது?
விடை: தம் குழந்தைகளின் கைகளால் பிசையப்பட்ட உணவு
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.(64)

95.வினா : குழலிசை, யாழிசை இனியது என்பவர் யார்?
விடை : தம் மக்களின் மழலை சொல் கேளாதவர் 
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.(66)

(தொடரும்)


 



1 Comments

  1. சிறப்பு... அருமையான பதிவு... மனமார்ந்த வாழ்த்துக்கள்... வேட்டையின் ஊடக அறப்பணி சிறக்கட்டும்...

    ReplyDelete
Previous Post Next Post