Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தான் வரலாற்றில் இடம்பிடித்த முதல் இந்துப் பெண்

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவீரா பர்காஷ் என்னும் இந்து மதப் பெண்ணே இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார்.

2022ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கும் சவீரா, பனெரிலிருந்து பொதுத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

இந்த தேர்தலில் இந்து மதப் பெண் ஒருவர் போட்டியிடப்போவதாக வெளிவரும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவப்பட்டு வருகிறது.

ibctamil


 



Post a Comment

0 Comments