
அம்மாவிற்கு தெரியும்
அம்மனின் அருள்
அப்பாவிற்கு தெரியும்
மோகினியாட்டம்
அப்பத்தாவிற்கு மட்டும் தான் தெரியும்
அவள் செஞ்சேலை மாற்றி
கருஞ்சேலை மாற்றும் போது மட்டும்
பற்கள் முளைக்காத
பெரியாச்சியாக மாறிவிடும் தருணம்...
அம்மா மாலையிடும் பொழுது
அம்மனிடம் உரையாடுவார்
அப்பா பணிமுடித்து வரும்போதெல்லாம்
மோகினியை துணையழைத்து வருவார்
நான் மட்டும் தான் கடவுளை
தங்கையாய் கொண்டு
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
கையில் கயிறுகட்டி பயத்தை
போக்கும் போதெல்லாம்
எந்த வண்ணத்தில் நினைத்தாலும்
தெய்வம் வந்து நிற்கும்
இருட்டோடு கடந்திடும் நொடியெல்லாம்
நாவோரம் முனுமுக்கிறேன்
எங்கெல்லாம் கேட்டோமோ
பெயருக்கு பின்னால் இணைந்த
சாமிகளின் பெயர்களை.....
சே கார்கவி கார்த்திக்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments