Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-117


குறள் 53. 
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

பெஞ்சாதி நல்ல பண்பு உள்ளவளா இருந்துட்டா, வாழ்க்கையில இல்லாததே இல்லைன்னு சொல்ற அளவுக்கு எல்லாமே இருக்கும். அப்பிடி ஒருத்தி கெடைய்க்காட்டா வாழ்க்கையில எதுவுமே இருக்காது. 

குறள் 54.
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

ஒசந்த பண்பான கற்புங்கிற பண்பு ஒரு பெண் கிட்ட இருந்திட்டா, அதை விட ஒசத்தியானது வேற ஒண்ணும் கெடையாது. 

குறள் 55.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

கட்டுனவனைத் தவிர வேற எந்த சாமியையும் கும்பிடாம இருக்க ஒரு பெண், வானத்தப் பார்த்து பெய்யின்னு சொல்லிட்டா போதும், ஒடனே மழை பெஞ்சிரும். 

குறள் 56.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

பெண்ணுங்கிறவ, தன்னையும் காத்து, கட்டுனவனையும் காத்துகிட்டு, குடும்பப் பெருமையை காப்பத்திக் கிறதுலயும், உறுதியா இருப்பா. 

குறள் 57.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பெண்களுக்கு காவல் போட்டு காக்குறதுனால ஒண்ணும் நடக்கப் போறது கெடையாது. அவங்களை அவங்களே காத்துகிட்டு, வாழ்ற வாழ்க்கை தான் ஒசத்தியானது.

(தொடரும்)


 



Post a Comment

0 Comments