Ticker

6/recent/ticker-posts

பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் சிலர் நெதன்யாகுவை சந்திக்க மறுப்பு!


காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேல் மிகவும் அதிகப்படியான விலை கொடுக்க நேரிடுகிறது 
என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

காசாவில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் இஸ்ரேலிய ராணுவம் மீள வரவழைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் புதிய செய்தி நிறுவனமான ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஹமாஸுக்கு  எதிரான போரில் ஒக்டோபர் ஏழு முதல் இன்று வரைக்குமே ஐயாயிரம் ராணுவ வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் மூவாயிரம் பேர் ஊனமுற்றவர்க ளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

இதில் ஐம்பத்தி எட்டு சதவீதம் பேர் கைகால்களை இழந்திருக்கிறார்கள். சிலர். ஈரல், கிட்னி பாதிக்கப்பட்டவர்களாகவும், மீதம் இருப்பவர்கள் தலை மற்றும் கண்களில் பாதிப்புக்களுக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூவாயிரம் பேரை நிரந்தர ஊனமுற்றவர்களாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

அவர்கள் தங்குவதற்கு உரிய இடங்களையும் இஸ்ரேல் மறுவாழ்வு மையம் ஒன்றையும் செய்து கொடுத்திருக்கிறது. மீதமுள்ள ஆயிரம் பேரை இஸ்ரேல் ராணுவம் தற்போதைக்கு கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களை நெதன்யாகு நேரடியாக சென்று சந்தித்து  புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இஸ்ரேலிய செயற்பாட்டாளர் ஒருவர், " அந்த ராணுவ வீரர்கள் காசாவில் நுழைகின்ற போது இரண்டு கால்களோடு இருந்தார்கள்.தற்போது உங்களுடன் புகைப்படம் எடுக்கின்ற போது ஒரு காலுடன் இருக்கின்றார்கள்."என்று தெரவித்துள்ளார்.

காசாவுக்குள் செல்லும் போது இரண்டு கால்களுடன் சென்றவர்கள் . காசாவில் இருந்து ஊனமுற்றவர்களாகவும். தங்களுடைய கை,கால்களை இழந்தவர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ,அந்த ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துகொம்டிருக்கின்றார்.என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அதே நேரம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் சிலர் நெதன்யாகுவை சந்திக்க மறுத்து இருக்கிறார்கள்.

ஹிஸ்புல்லா போராளிகளின் சுரங்கங்கள்

இவ்வாறான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு மரண பீதியை ஏற்படுத்தக்கூடிய எச்சரிக்கையை  ஹிஸ்புல்லா போராளிகள் விடுத்திருக்கிறார்.

அதாவது ஹமாஸ் அமைப்பினரிடம் இருப்பது போன்ற மிகப்பெரிய சுரங்கங்கள் ஹிஸ்புல்லா போராளிகளிடம் இருப்பதாகவும், அந்த சுரங்கங்கள் லெபனானில் இருந்து இஸ்ரேல் வரைக்கும் செல்லக்கூடிய சுரங்கங்கள் என்றும் தெரிவிக்கப்பபுகின்றது.

லெபனானில் இருந்து இஸ்ரேல் வரைக்கும் , 80 மீட்டர் ஆழத்தில் ஹிஸ்புல்லாவின் சுரங்கப்பாதை

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அந்த சுரங்கங்கள் மூலமாக இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹிஸ்புல்லா அமைப்பு நேரடி தாக்குதலை  மேற்கொள்வதோடு இஸ்ரேலின் பல பகுதிகளையும் கைப்பற்றக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏழாம் திகதி ஹமாஸ் நடத்தியதைப் போன்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் செயற்கை நுண்ணறிவு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை

இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு உடன் இயங்குகின்ற புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஈரான் நிலைநிறுத்தி இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுடன் இயங்குகின்ற புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆனது ஆயிரம் கிலோமீட்டர் பறந்து சென்று இலக்குகளைத் தாக்கக் கூடிய வல்லமை கொண்ட ஒன்று. 


ஈரானின் செயற்கை நுண்ணறிவு உடன் இயங்குகின்ற புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணை

இந்த ஏவுகணை தன்னுடைய பயணத்தின் போது எதிரிகளின்  இலக்குகளை துள்ளியமாக தாக்குகின்ற திறன் கொண்டது என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.. 

செயற்கை நுண்ணறிவுடன் இயங்குகின்ற அந்த கப்பலை ஈரான் நிலைநிறுத்தி இருப்பது மத்திய கிழக்கில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மாஸ்டர் 


 



Post a Comment

0 Comments