'கழுதை விமானம்' மூலமாக அமெரிக்காவினுள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்கள்!

'கழுதை விமானம்' மூலமாக அமெரிக்காவினுள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்கள்!

303 இந்தியர்களுடன் பிரான்ஸ் நாட்டில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் இப்போது இந்தியாவுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்தியர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? என்பதற்கான தகவல் வெளிவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு துபாயிலிருந்து நிகரகுவா நாட்டிற்கு சென்ற விமானத்தில் ஆட்கடத்தல் நடப்பதாக பிரான்ஸ் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 300க்கும் அதிகமான இந்தியர்களை ஏற்றிச் சென்ற விமானத்தை பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கி, அதிகாரிகள் சோதனை செய்தனர். சில தினங்களுக்கு அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அதில் 303 இந்தியர்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அந்த விமானம் 276 பயணிகளுடன் இன்று காலை 4 மணியளவில் மும்பையில் வந்திறங்கியது. 

கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டு விமானத்தில் 303 இந்தியர்களுடன் 11 சிறார்கள் தனியாக இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து அங்கேயே தங்க வைத்து படுக்கைகள், கழிப்பறைகள் என எல்லா வசதிகளும் விமான நிலையத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விசாரணையில் இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய வந்தார்களா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்தனர். 

அமெரிக்காவில் நுழைய முயற்சிக்கும் இந்தியர்கள் முதலில் மத்திய கிழக்கு நாடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்து சட்டவிரோதமாக செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 2023 இல் மட்டும் சுமார் 96 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்து, கைது செய்யப்பட்டுள்ளனர். 

Donkey Flight முறை:

இப்படி சட்ட விரோதமாக நுழைவதற்கு பல முறைகளை அவர்கள் கையாளுகின்றனர். அதில் முக்கியமான ஒன்றுதான் கழுதை விமானம் எனப்படும் Donkey Flight முறை. அதாவது நீண்ட தூர விமான ரூட்டை எடுத்து, தாங்கள் விரும்பும் நாட்டுக்கு செல்ல குறைந்த விதிமுறைகள் உள்ள நாட்டிற்கு முதலில் பயணித்து, அங்கிருந்து பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக செல்வார்கள். 

அப்படித்தான் நிகரகுவா நாட்டிற்குச் சென்ற விமானத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவினுள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்கள் சென்றார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், விமானம் பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஒருவேளை இந்த சோதனையில் அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

kalkionline


 



Post a Comment

Previous Post Next Post