காலநிலை மாற்றத்தில் இருந்து காத்துகொள்ளும் வகையில் மிதக்கும் நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
காலநிலை மாற்றத்தால் பல வருடக்காலமாக இருக்கும் பனிக்கட்டிகள் உருகி கடலில் கலப்பதால், கடலின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பூமி வெப்பமடைத்தல், காற்று மாசுபாடு, நில மாசுபாடு போன்றவை கட்டுக்குள் இல்லாத அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக எதிர்பாராத வானிலை மாற்றங்களை நம்மால் பார்க்கமுடிகிறது.
இந்த காலநிலை மாற்றத்தில் இருந்து காத்துகொள்ள மிதக்கும் நகரம் விடையாக இருக்கும் என நிபுணர்கள் கருதிகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, 2100 ஆம் ஆண்டிற்குள் கடல் மட்ட அளவு 6.5 அடி வரை உயர வாய்ப்புள்ளதாகவும், 2150 ஆம் ஆண்டிற்குள் 2150 அடி வரை உயர வாய்ப்புள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு கடற்கரை நகரங்கள் நீரூக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் இந்த மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நகரங்கள் மிதக்கும் நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
சுமார் 4 கி.மீ அளவில் வட்டவடிவிளான சுவர்களுக்குள் மிதக்கும் நகரத்தை வடிவமைக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சிறிய நகரத்திற்குள்ளேயே வசிப்பதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு, மருத்துவமனை, கல்வி நிலையங்கள், அரசு
அலுவலகங்கள் ஆகியவற்றை கட்ட திட்டமிட்டுள்ளனர்.
நீங்கள் நினைப்பதுபோல், இது ஒரு தீவு போல் மிதக்காது, வட்டத்திற்குள் கொண்டுவரும் அனைத்து கட்டிடங்களும் மிதக்கும். நகரத்திற்குள் போக்குவரத்து என்பது போட் மூலமாக நடைபெறும். மேலும், மக்கள் வசிப்பதற்கான விவசாயம், எரிச்சக்தி, மின்சாரம் ஆகியவையும் நகரத்திற்குள்ளேயே உற்பத்தி செய்யப்படும்.
அன்றாட தேவைகளுக்கான ஹோட்டல்கள், கடைகள், விளையாட்டு அரங்கங்கள் ஆகியவையும் இந்த மிதக்கும் நகரங்களில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்டன் நாகரிகத்துடன் அனைத்து வசதிகளுடன் கூடிய இதுபோன்ற மிதக்கும் நகரங்கள் இயற்கை சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்படும்.
இதற்கான பணிகள் தொடக்கப்பட்ட நிலையில், கூடிய விரைவில் மக்கள் மிதக்கும் நகரத்திற்கு குடிபெயர்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments