இந்தியாவை அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்கா.. ஐபிஎல் ஏலத்தை நினைத்து கோட்டை விட்ட வீரர்கள்

இந்தியாவை அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்கா.. ஐபிஎல் ஏலத்தை நினைத்து கோட்டை விட்ட வீரர்கள்

போர்ட் எலிசபெத் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் இருக்கிறது.ஐபிஎல் ஏலம் நடைபெற்றதால், போட்டியில் வீரர்கள் கவனக்குறைவாக விளையாடி விட்டதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் 4 ரன்களில் ஆட்டம் இழக்க தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி தொடர்ந்து இரண்டாவது முறையாக அரை சதம் கடந்தார்.

83 பந்துகளில் அவர் 62 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு பவுண்டரிகளும்,ஒரு சிக்ஸரும் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 10 ரன்களில் வெளியேற கே எல் ராகுல் மட்டும் அபாரமாக நின்று அரைசதம் கடந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த சஞ்சு சாம்சன் அந்த வாய்ப்பை வீணடித்து வெறும் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

அதேபோன்று இன்று தன்னுடைய முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ரிங்கு சிங், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 14 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அக்சர் பட்டேல் 7 ரன்கள் சேர்க்க ஆர்ஸ்தீப் சிங் மட்டும் இறுதியில் 18 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 46.2 ஓவர் முடிவில் 211 ரன்கள் சேர்த்தது. 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க வீரர் ரீசா ஹெண்ரிக்யூஸ் மற்றும் டோனி டிஸோர்சி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஹென்ரிக்யூஸ் 52 ரன்களில் ஆட்டம் இழக்க,இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 13 ரன்கள் சேர்த்தது.

ராஸி வேண்டர் டுஷன் 36 ரன்கள் சேர்க்க கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற டோனி டி சோர்சி 122 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 42.3 ஓவர்கள் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்கள் சேர்த்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஆர்ஸ்தீப் சிங் 8 ஓவர் வீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் சேர்த்தார்.இதைப் போன்று ரிங்கு சிங் ஒரு ஓவர் வீசி இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.

mykhel




 



Post a Comment

Previous Post Next Post