Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் சடுதியாக அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்கள்

இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

கடந்த வருடம் 600 எய்ட்ஸ் நோயாளர்கள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது நாட்டில் 6000 நோயாளர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மசாஜ் நிலையங்கள் கண்காணிப்பு
நாட்டில் மூவாயிரம் பேருக்கு ஒருவர் எய்ட்ஸ் நோயாளி என கூறிய அவர் சமூக நோய்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.

அது தவிர நாட்டில் உள்ள மசாஜ் நிலைகள் மற்றும் ஸ்பாக்களை நெறிப்படுத்தலுக்கு உட்படுத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

ibctamil


 



Post a Comment

0 Comments