
குறள் 105.
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருந்து செய்யுத ஒதவி அதோட அளவைப் பொறுத்து மதிப்பிட முடியாது. யாருக்கு ஒதவுதமோ அவரோட நெலைமையை பொறுத்துத் தான் மதிப்பிட முடியும்.
குறள் 107.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
தங்களுக்கு வந்த தும்பத்தை போக்கி வைத்த ஆளுங்களோட உண்மையான நட்பை, பெரியவங்க இப்ப மட்டும் இல்ல, அடுத்த பிறவியிலும் மறக்காம நெனச்சு கிட்டே இருப்பாங்க.
குறள் 109.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
இதுக்கு முன்னால நமக்கு ஒருத்தரு ஒரு நல்லது செஞ்சிருக்காரு. ஆனா அவரே இப்பம் நம்மை உசுரையே எடுக்க மாதிரி ஒரு கெடுதல் செஞ்சிருதாரு. நாம அவரு இதுக்கு முந்தி செஞ்ச நல்லதை நெனச்சுப் பாத்தாலே போதும்... இப்பம் செஞ்ச கெடுதல் நம்ம மனசுல இருந்து மறைஞ்சிரும்.
குறள் 112.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
நியாயமா நடக்கக்கூடிய ஒருத்தன் சேத்து வச்சிருக்க சொத்து சொகத்துக்கெல்லாம் எந்த ஒரு சேதாரமும் வராது. அடுத்த தலைமுறைக்கும் அது பயன் கொடுக்கும்.
குறள் 113.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
நடுவு நிலையா இல்லாம, நாம ஒரு சார்பா நடந்தோம்னா, அதுனால நமக்கு ஆதாயம் கூட கெடைய்க்கலாம். அப்படி இருந்தாலும், அந்த எண்ணத்தை ஒதுக்கி வச்சுட்டு எப்பமும் நடுவு நிலமை தவறாம தான் நாம நடக்கணும்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments