Ticker

6/recent/ticker-posts

மௌனத்தின் முகவரி!


ஒரே வீட்டில்  புழங்குகிறோம்
ஒரே அறையில் தூங்குகிறோம்
நீ பார்க்காத போது நானும்
நான் பார்க்காத போது நீயும்
ஒருவரையொருவர் 
ஒரு தலையாக
சந்தித்துக் கொள்கிறோம்
உன்னோடு உரையாட நானும்
என்னோடு பேசிவிட நீயும்
மனதளவில் திட்டமிடுகிறோம்
யார் முதலில் பேசுவது ?
என்பதில்
இருவருமே இரண்டாமிடத்தில்
இருப்பதால் தான்
சலனமற்று முடிகின்றன நம்
சந்தோசப் பொழுதுகள் 
நம் மௌனத்தின் நீட்சியில்
கனவுகள் தான் வளரும்
சொற்கள் முடங்கி விடும்
எனது கோட்டை
நானும் தாண்டுகிறேன்
உனது கோட்டை
நீயும் கடந்து வா
சந்தித்து விடுவோம் 
வரம்புக்குட்பட்டது தான்
வாழ்க்கை
மௌனத்தின் முகவரி
ஊடலுக்குத்தான் உதவும்
ஊர் கொண்டு சேர்க்காது.

ஐ.தர்மசிங்
நாகர்கோவில் 


 



Post a Comment

0 Comments