Ticker

6/recent/ticker-posts

ஒரே ஓர் புள்ளி!


ஒரு புள்ளி வைத்து வட்டம் 
வரைந்து முடிக்கிறேன்
நிலவினை கையில் ஏந்தி 
வந்து நிற்கின்றனர்
வான்வெளி சிப்பாய்கள்...

நட்சத்திரங்களை
வரிசைப்படுத்தி நடந்துவரும் 
வேளையில்தான்
வானத்தில் புயலென
புன்னகை சிந்தி அமைதி பெறுகிறது
ஓர் பாதை மறந்த பெண்ணின் கோவம்...

நான் எங்கெல்லாம்
தனிமையை எண்ணி
அமர்கிறேனோ..
அங்கெல்லாம் துணையாய் 
வந்தமர்கிறது
மரங்களின் நிழல்...

நான் பொறுமையாக
அமர்ந்தெழுந்த நேரத்தில் தான்
நீங்கள் இல்லாத விசயத்தை
காரணமென பொறுமைக்கு 
வெடிமருந்திடுகிறீர்...

சே கார்கவி கார்த்திக்


 



Post a Comment

0 Comments