Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -30


குறள்:
1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் 
பசந்தவென் பண்பியார்க்கு ரைக்கோ பிற.

என் தந்தை வெளிநாடு சென்று 
ஐந்தாண்டு காலம் 
பணிசெய்து விட்டு 
திரும்பிவந்து விடுவாராம். 
அம்மாவும்ம னசின்றி 
தலையாட்டுவது புரிகிறது! 
நானும் சரியென்றேன்! 
நேற்றிரவு விமானப்பயணம்! 
இன்று வெளிநாடு!
பணிக்களத்தில் அவர்! 
அப்பாவின் ஏக்கம் 
மனதைப்பிழிகிறது! 
அழுகை அழுகையாக வருகிறது! 
உருகி உருக்குலைவதை 
யாரிடம் சொல்லமுடியும்?

குறள்:11182
அவர்தந்தார் என்னும் தகையால் 
இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு.

அரைகுறையா தூங்கி 
முழிச்சுக் கண்ணாடி முன்னாலே 
நின்னு என்னைப் பார்த்தேன்! 
என்ன மீத்தேன் பாதிச்சநெலம்மாதிரி 
நெறம்மாறித் தெரியுது! 
ஓ! என்னை விரும்பும் 
உயிர்த்தோழி 
ஊரில் இருந்து இன்னும்வரல! 
அந்தப்பிரிவு உண்டாக்கிய 
ஏக்கம் பெருமிதத்தோட 
படர்ந்திருக்கு.

குறள்:1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் 
கைம்மாறா நோயும் பசலையும் தந்து.

அம்மா கவிதா! 
வழக்கமான உன்னுடைய 
கலகலப்பு எங்கே?
அழகான புன்னகை எங்கே? 
ஏ வாடிப் போயி இருக்குற? 
அதுவா!
என் தம்பியோட ஒரே 
வம்பிழுத்துக்கிட்டே இருப்பேன்! 
அவன் ஊருக்குப்போயி 
நாலு நாளாச்சு! 
கலகலப்பையும் சிரிப்பையும் 
எடுத்துக்கிட்டு போயிட்டான்! 
வாட்டத்தையும் சோகத்தையும் 
எனக்குக் கொடுத்துட்டு 
போயிட்டாண்டி தமிழரசி !

(தொடரும்)


 



Post a Comment

0 Comments