Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-24

116. வினா : தினைத்துணையும் பனைத்துணையாகும் எப்போது?
விடை: பயன் தெரிந்தவர் உதவி பெறும் போது 
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.(104)

117. வினா : பனை மரத்துடன் ஒப்பிடப்படுவது எது?
விடை: தினை அளவு செய்த உதவி 
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.(104)

118.வினா : ஏழேழு பிறவிகளிலும் நினைக்கக்கூடியது எது?
விடை : தம் துன்பம் நீக்கியோர் நட்பு 
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.(107)

119.வினா : எதனை மறத்தல் கூடாது? 
விடை: ஒருவர் செய்த நன்மையை
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.(108)

120. வினா : எதனை மறப்பது நன்று?
விடை : ஒருவர் செய்த தீமையை 
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.(108)

(தொடரும்)

Post a Comment

0 Comments