(நபி வழியில் தொழுகை)

12.‘ஆமீன்” கூறுதலும் வேறு ஸூறா ஓதுதலும் :
சத்தமிட்டு ஓதி தொழும் தொழுகைகளில் ஸூறதுல் பாதிஹாவை இமாம் ஓதி முடித்ததும் இமாம் “ஆமீன்| என்று நீட்டி கூறுவதோடு , மஃமூம்களும் ஆமீன் என்று நீட்டி கூற வேண்டும்.
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸூறா பாதிஹா ஓதி முடித்ததும் சத்தத்தை உயர்த்தி , ‘ஆமீன்” என்று நீட்டி கூறுவார்கள்” (புஹாரி , அபூதாவூத்).
மஃமூம்கள் மட்டுமன்றி இமாமும் ஆமீன் கூற வேண்டும் என்பதற்கு மேற்படி ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது.
ஆமீன் கூறுவதன் சிறப்பு குறித்து நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் :
1.‘நாங்கள் ஆமீன் கூறும் போது வானிலுள்ள மலக்குகளும் ஆமீன் கூறுகிறார்கள். யாருடைய ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் இணைகிறதோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்”
(புஹாரி , முஸ்லிம்).
2.’நாங்கள் ஸலாம் சொல்வதையும் ஆமீன் கூறுவதையும் பார்த்து யூதர்கள் பொறாமைப்படுவது போல் வேறு எதற்கும் பொறாமைப்படுவதில்லை”(அஹ்மத் , இப்னு மாஜஹ்).
குறிப்பு :
சிலர் இந்த ஹதீஸை கூறி தொழுகைக்கு பின்னர் ஓதப்படுகின்ற கூட்டு துஆவை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் மேலுள்ள ஹதீஸ் தொழுகையில் ஸூறதுல் பாதிஹாவுக்கு பின்ஆமீன் கூறுவதைப் பற்றி பேசும் ஹதீஸாகும். பெரும்பாலான பள்ளிவாசல்களில் தொழுகை முடிந்தவுடன் ஓதப்படும் கூட்டு துஆ என்ற நடைமுறை நபியவர்களோ , ஸஹாபாக்களோ கடைப்பிடிக்காத , மார்க்கத்தில் கூறப்படாத ஒன்றாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.
சிலர் தொழுகை நடத்தும் போது ஸூறா பாதிஹா ஓதி முடித்ததும் “றப்பிஹ்பிர் லீ என்று கூறி ஆமீன் என்று கூறுவர். பின்வரும் ஹதீஸை அதற்கு ஆதாரமாக கூறுவர் :
நபியவர்கள் வலழ்ழால்லீன் என்று கூறியதும் “ரப்பிஹ்பிர் லீ ஆமீன்’ என்று கூறுவார்கள்’ என “ஸுனனுல் பைஹகி’ எனும் ஹதீஸ் நூலில் ஒரு ஹதீஸ் இடம்பெறுகிறது.
ஆனால் இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அபூபக்ர் அந்நஹ்ஷலி என்பவர் பலவீனமானவர் என முற்கால ஹதீஸ்துறை மேதைகளில் முக்கியமானவரான இமாம் அபூஸுர்ஆ(ரஹிமஹுமல்லாஹ்) உட்பட பலர் கூறுகின்றனர். எனவே இந்த ஹதீஸ ஆதாரமற்றதாகும். (பார்க்க : “ஷர்ஹுத்
தக்ரீப்| , (2ஃ269) “அஸ்லு ஸிபதி ஸலாதிந் நபி, (1ஃ382).
(தொடரும்)
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments