(நபி வழியில் தொழுகை)

14. றுகூஉவிலிருந்து நிலைக்கு வருதல்:
றுகூஉ செய்து முடித்த பின் இரு கைகளையும் உயர்த்தி ‘இஃதிதால்’ எனப்படும் நிலைக்கு வர வேண்டும். இந்த நிலைக்கு வரும் போது இமாமும் தனித்து தொழுபவரும் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூற வேண்டும். இமாமைப் பின்பற்றி தொழும் மஃமூம்கள் ‘ ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறாமல் கீழ்வரும் துஆக்களுள் ஒன்றை ஓத வேண்டும்
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
“றப்பனா லகல்ஹம்து’
“அல்லாஹும்ம றப்பனா லகல்ஹம்து’
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ
“றப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கதீரன் தையிபன் முபாரகன் பிஹி’
(இதை ஒரு ஸஹாபி ஓதிய போது முப்பதுக்கு மேற்பட்ட மலக்குகள் இதன் நன்மையை பதிவதற்காக போட்டியிட்டதை கண்டேன்” என நபியவர்கள் கூறினார்கள் (புஹாரி , அபூதாவூத்).
அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் கூறினார்கள் : ‘இமாம் ஸமிஅல்லாஹு லிமன்ஹமிதஹ்” என்று கூறினால் (மஃமூம்களாகிய) நீங்கள் ‘அல்லாஹும்ம றப்பனா வலகல் ஹம்து” எனக் கூறுங்கள். இவ்வாறு ஒருவர் கூறுவது மலக்குகள் கூறுவதோடு இணைந்துவிட்டால் அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்|| (புஹாரி , முஸ்லிம்).
மேற்படி ஹதீஸ் ம்ஃமூம்கள் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறாமல் மேற்குறிப்பிட்ட துஆக்களில் ஒன்றை ஓத வேண்டும் என்பதற்கு ஆதாரமாய் அமைகிறது.
(தொடரும்)
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments