Ticker

6/recent/ticker-posts

சிறுமியை நரபலி கொடுத்து சமைத்து சாப்பிட்ட தம்பதி... நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் தீர்ப்பு !

இந்தியாவில் மூட நம்பிக்கைகளுக்கு சிலர் அடிமையாகி இருக்கின்றனர். இதனாலே போலி சாமியார் உள்ளிட்ட பலரும் உருவாக்குகின்றனர். அந்த வகையில் நாட்டில் பல முறை நரபலி கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது. அதன்படி அண்மையில் கேரளாவில் பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அந்த வகையில் இந்த சம்பவத்துக்கு முன்னர் சிறுமி ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டு, அது சமைத்து சாப்பிடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அதன் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ளது கான்பூரை அடுத்துள்ளது கட்டம்பூர் என்ற பகுதி. இங்கு பரசுராம் - சுனைனா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கழிந்த நிலையிலும் குழந்தை இல்லை. இதனால் வழிபாடுகள், மருத்துவம் உள்ளிட்ட பலவையும் அணுகியுள்ளனர். அப்போதும் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் அவர்களுக்கு தெரிந்த ஒருவர் மூலம் மாந்த்ரீகம் செய்பவர்களை அணுக எண்ணியுள்ளனர்.

அதன்படி கடந்த நவம்பர் 2020-ம் ஆண்டு மந்திரவாதி ஒருவரை அணுகியுள்ளனர். அப்போது அந்த மந்திரவாதி, 10 வயத்துக்குட்பட்ட பெண் குழந்தை ஒன்றை நரபலி கொடுக்க வேண்டும் என்றும், பிறகு அவரது குறிப்பிட்ட சில உறுப்புகளை குடும்பத்தோடு சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். முதலில் இதனை செய்ய யோசித்த தம்பதி, பிறகு குழந்தை வேண்டும் என்று இதனை செய்ய ஒப்புக்கொண்டனர்.

அதன்படி 2020 நவம்பர் 14ம் தேதி தனது வீட்டின் அருகே 7 வயது பெண் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. இதனை கண்ட அந்த தம்பதி, உடனே அந்த குழந்தையை தனது உறவினர்கள் உதவியுடன் கடத்தினர். தொடர்ந்து அந்த சிறுமியை நரபலி கொடுத்து, அவரது கல்லீரல் உட்பட சில உறுப்புகளை சமைத்து பரசுராம் - சுனைனா தம்பதி, மருமகன் அங்குல் மற்றும் வீரேன் உள்ளிட்டோர் சாப்பிட்டுள்ளனர். பிறகு அவரது உடலை ஒரு வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.

இதனிடையே தங்கள் குழந்தையை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரின்பேரில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுமியின் உடல் கண்டறியப்பட்டது. தொடர்ந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் பரசுராமிடம் விசாரிக்கையில், அவரது பதில் முரணாக இருந்துள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், சிறுமியை கடத்தி நரபலி கொடுத்து அவரது உடலை வீசிய சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து தம்பதி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்த நிலையில், இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை(18 December 2023) நீதிபதி அறிவித்தார். அதன்படி பரசுராம் - சுனைனா தம்பதி உட்பட 4 பேர் குற்றவாளிகள் எனவும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் மூவரில் இருவருக்கு ரூ.45,000 அபராதம், ஒருவருக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தரப்பில் இருந்து வரவேற்கப்படவில்ல.

குற்றாவளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் மட்டுமே விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால், இதனை மேல் முறையீடு செய்யவுள்ளதாக பெற்றோர் தரப்பில் இருந்து கூறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

kalaignarseithigal


 



Post a Comment

0 Comments