Ticker

6/recent/ticker-posts

உலககோப்பை டி20 தொடரின் குரூப் விவரத்தை வெளியிட்டது ஐசிசி!


உலககோப்பைத் தொடரில் இருபது அணிகள் கலந்துக்கொள்ளப்போகும் நிலையில் நான்கு குரூப்பாக அணிகளைப் பிரித்த ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஐசிசி.

உலககோப்பை இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்போகும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் இப்போதிலிருந்தே தயாரானால் மட்டுமே உலககோப்பையை சிறப்பாக நடத்தி முடிக்க முடியும். அந்தவகையில் பிசிசிஐ ஒரு பக்கமும் ஐசிசி ஒரு பக்கமும் பல முன்னேற்படுகளை செய்து வருகிறது.

இந்நிலையில் ஐசிசி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இத்தொடரில் இருபது அணிகள் கலந்துக்கொள்ளும் நிலையில் அதனை நான்கு குரூப்களாகப் பிரித்துள்ளனர். அதாவது குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி உள்ளிட்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். இந்த நான்கு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் பங்குப்பெறும். அந்த ஐந்து அணிகளுக்குள் போட்டிகள் வைத்து முதலில் வரும் இரண்டு அணிகளை தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு குரூப்பில் இரண்டு அணி என மொத்தம் எட்டு அணிகளுக்குள் போட்டி நடக்கும். மீண்டும் அந்த எட்டு அணிகளை இரண்டு குரூப்களாக பிரித்து நான்கு அணிகளை தேர்ந்தெடுப்பார்கள். இந்த நான்கு அணிகளே அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெறும். இதற்கான நான்கு குரூப்களின் அணிகளைத் தான் இப்போது ஐசிசி அறிவித்துள்ளது.

முதலில் குரூப் ஏ வில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து உள்ளன. இதில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனத்துடன் விளையாடினால் மட்டுமே முதல் இரண்டு இடத்தில் வர முடியும்.

இரண்டாவதாக குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மிகவும் பலம் வாய்ந்த அணிகள்.

மூன்றாவதாக குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான், உகாண்டா , பப்புவா நீயூகினியா ஆகிய நாடுகள் உள்ளன. இதில் நியூசிலாந்து , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலம் வாய்ந்த அணிகள். மேலும் ஆஃப்கானிஸ்தான் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.
நான்காவது குரூப் டி யில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் நான்கு நாடுகளுமே மிகவும் பலம் வாய்ந்த அணிகளே. மற்ற குரூப்பை விட இந்த குரூப்பில் உள்ள அணிகளின் போட்டி சுவாரசியமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

kalkionline


 



Post a Comment

0 Comments