
குறள்:1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ
மற்றவர்க் காணாது அமைவில கண்.
இதோ
அடுத்த தெருவில்தான்
இருக்கின்றாள்!
என் வகுப்புத்தோழிதான்!
நெருக்கமான நட்புதான்!
இன்று விடுமுறைதான்!
ஒருநடைவந்து பார்த்து
போகலாமல்லவா!
அந்தநினைப்பே வராது!
பெரியஇவ!
அவளபாக்காம என்கண்களுக்கு
அமைதியே இல்லை!
குறள்:1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா
ஆயிடை ஆரஞர் உற்றன கண்.
எங்க அப்பாவுக்கு
மருந்து முகவர்பணி!
இன்று வந்திருக்கார்!
நான்குநாள் இருப்பார்!
மாறிமாறி ஊர்ப்பயண
வேலைதான்!
இதோ படுக்கப்போறோம்!
அப்பா பக்கத்துலதான்
நான்படுப்பேன்!
அவரு வரலனு சரியா
கண்கள் தூங்காது!
வந்துட்டார்ல
மறுபடியும் எப்ப போவாரோன்னு
கண்கள் தூங்காது!
அப்பாவின் அன்புக்காக ஏங்கும்
கண்களே இப்படித்தான்!
குறள்:1180
மறைபெறல் ஊரார்க்கு
அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
எனக்கு
தமிழ் ஆசிரியைனா
ரொம்ப பிடிக்கும்.
அவங்க இலக்கியக்காட்சிகளை
சொன்னா நம்ம கண்முன்னால
நடக்குறமாதிரி இருக்கும்!
அவங்க ரெண்டுநாள்
விடுப்பாம்!
எனக்கு என்னமோ மாதிரி இருக்கு!
இந்தோ வந்துட்டாளுக தோழிகள்
ஏண்டி மரத்தடியில
உக்காந்திருக்க?
முகமெல்லாம் ஒருமாதிரிஇருக்கு!
கண்கள் கலங்கியிருக்கு!
என்மனச காட்டிக்கொடுக்க
கண்களே இருக்குறப்ப
நான் மறைக்கிறத
தெரிஞ்சுக்குறது
மத்தவங்களுக்கு கடினமில்லை!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments