(நபி வழியில் தொழுகை)
2. நெருக்கமாக நிற்றல் :
ஸப்புகளில் நேராக மட்டுமன்றி நெருக்கமாகவும் நிற்க வேண்டும்.ஸஹாபாக்கள் எவ்வாறு நெருக்கமாக நின்றார்கள் என்பது பற்றி அனஸ் (றழி) கூறுகிறார்கள் :
எங்களில் ஒருவர் தனது தோள் புயத்தை மற்றவரின் தோள் புயத்தோடும் தனது பாதத்தை மற்றவரின் பாதத்தோடும் சேர்த்து வைத்து தொழுவார்கள் (புஹாரி).
நுஃமான் இப்னு பஷீர் (ரழி) கூறுகிறார்கள் : எங்களில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் காலோடு தனது காலை சேர்த்து வைப்பதை நான் பார்த்தேன் (அஹ்மத், பைஹகி).
ஆனால் இன்று பள்ளிவாசல்களில் தொழுகின்ற அதிகமானோர் ஸப்புகளில் ஸஹாபாக்கள் நின்றது போன்று தோளோடு தோள் சேர்த்து, பாதத்தோடு பாதம் சேர்த்து நிற்பதில்லை. ஒருவரோடு ஒருவர் கோபித்துக் கொண்டு நிற்பது போல் கணிசமான அளவு இடைவெளி விட்டே நிற்கின்றனர். நெருக்கமாக நிற்பதற்காக யாரேனும் நெருங்கிச் சென்றாலும் பலர் விலகிச் செல்வதையே காண முடிகிறது.
ஜமாஅத் தொழுகையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமையும் அன்பும் ஏற்பட வேண்டும் என்பதாகும். ஸஹாபாக்கள் நின்றது போன்று ஸப்புகளில் நிற்கும் போது தான் ஒற்றுமையும் அன்பும் ஏற்பட முடியும்.
நபியவர்கள் கூறினார்கள் : உங்கள் ஸப்புகளில் ஷைத்தான்களுக்கு இடைவெளி வைக்காதீர்கள். யார் ஸப்புகளில் அடுத்தவரோடு சேர்ந்து நிற்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸப்புகளில் விலகி நிற்கிறார்களோ அவர்களை விட்டு அல்லாஹ்வும் விலகி விடுவான்(அபூதாவூத்).
(தொடரும்)
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments