
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். உலகின் மிக நீளமான ரயில் நிலையம் என்ற சாதனையை இந்தியா (Indian Railways) தொடர்ந்து இரண்டு முறை பெற்றுள்ளது. இருந்தாலும் இந்தியாவில் புல்லட் ரயில் எப்போது வரும் என்ற காத்திருப்பு தொடர்கிறது. மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அடுத்த 4-5 ஆண்டுகளில் கூடுதலாக, 3,000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது
புல்லட் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் இயக்கப்படும், இது மும்பை-அகமதாபாத் இடையேயான முழு தூரத்தையும் வெறும் 127 நிமிடங்களில் கடக்கும். ரயிலின் இந்த வேகத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகிவிட்டீர்களா? மணிக்கு 600 கிலோமீட்டர் ஓடும் ரயில் உலகில் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலகின் அதிவேக ரயிலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மணிக்கு 200... 300 அல்ல 500 கி.மீட்டரும் அல்ல. இந்த ரயில் மணிக்கு 603 கி.மீ வேகத்தில் ஓடுகிறது.
உலகின் அதிவேக ரயில்
உலகின் அதிவேக ரயிலின் வேகம், தண்டவாளத்தில் ஓடும் போது, படத்தை எடுப்பது கூட சிரமமாக உள்ளது. அதன் பெட்டிகளை எண்ணுவது கூட கடினம். உலகில் புல்லட் ரயில்களின் சராசரி வேகம் சுமார் 300 ஆக இருக்கும் நிலையில், இந்த புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 603 கி.மீ. சீனாவில் ஓடும் உலகின் அதிவேக புல்லட் ரயிலின் பெயர் மாக்லேவ்.
சிறப்புவாய்ந்த புல்லட் ரயில்
இந்த ரயிலின் சாதாரண வேகம் மணிக்கு 300 கி.மீ., அதிகபட்ச வேகம் மணிக்கு 603 கி.மீ. Maglev இன் தொழில்நுட்பம் முதலில் ஜெர்மனியில் இருந்து கிடைத்தபோது, அதை சீனா ஏற்றுக் கொண்டது. சீன ரயில் தயாரிப்பு நிறுவனமான சிஆர்ஆர்சி நிறுவனம் இந்த புல்லட் ரயிலின் அதிவேகத்தை வெற்றிகரமாக சோதித்தது.
சீனாவின் புதிய Maglevக்கு முன், உலகின் அதிவேக ரயில் என்ற பட்டத்தை பிரான்சின் Euroduplex TGV பெற்றுள்ளது. இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 574.8 கிலோமீட்டர் ஆகும்.
ரயிலின் அதிக வேகத்தின் பின்னால் உள்ள ரகசியம்
மக்லேவ் ரயிலின் தொழில்நுட்பம் மற்ற புல்லட் ரயில்களில் இருந்து வேறுபட்டது. இந்த ரயில் மேக்னடிக் லெவிடேஷன் சிஸ்டம் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே ஒருவித வலுவான காந்த விசை உள்ளது, இது வேகத்தை பெற உதவுகிறது.
zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments