Ticker

6/recent/ticker-posts

துணிக்கடைகளில் திருடி மாட்டிக்கொண்ட பெண் நாடாளுமனற உறுப்பினர்., ராஜினாமா செய்து மன்னிப்பு

நியூசிலாந்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் துணிக்கடைகளில் திருடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில், கிரீன் பார்ட்டி எம்பி கோல்ரிஸ் காரமன்(), இரண்டு ஷாப்பிங் கடைகளில் இருந்து மூன்று முறை துணிகளைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் திங்கள்கிழமை பதவி விலகினார். கோல்ரிஸ் காரமன் திருடும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் உள்ள கடைகளில் ஆடைகளை திருடியதாக கோல்ரிட்ஜ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கடைகளின் வீடியோ காட்சிகளை பொலிஸார் பெற்றுள்ளனர். தற்போது கோல்ரிஸுக்கு எதிரான விசாரணையும் தொடங்கியுள்ளது.

கோல்ரிஸ் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். நியூஸிலாந்திலும் வெளிநாட்டிலும் மனித உரிமைகள் விவகாரங்களில் பல பணிகளைச் செய்துள்ளார்.

2017-ஆம் ஆண்டில், நியூசிலாந்து அரசாங்கத்தில் இடம் பெற்ற முதல் அகதி என்ற பெருமையை பெற்றார். நீதி அமைச்சராக பதவியேற்றார்.

தற்போது கோல்ரிஸுக்குப் பதிலாக மற்றொரு பெண் எம்.பி.க்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பசுமைக் கட்சி தெரிவித்துள்ளது.

42 வயதான கோல்ரிஸின் குடும்பத்தினர் ஈரானில் இருந்து வெளியேறி நியூசிலாந்துக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்தனர். இதற்குப் பிறகு அவருக்கும் இங்கு குடியுரிமை கிடைத்தது.

ஆனால், இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிக்கை எதையும் பொலிசார் தயாரிக்கவில்லை.

கோல்ரிஸ் கையில் பிராண்டட் கைப்பை வைத்திருப்பது காணொளியில் தெரிகிறது. அவர் தனது முகத்தை கமெராவில் காட்டாமல் தவிர்த்து, சில துணிகளை பையில் வைத்துகொண்டு வெளியேறுகிறார்.

பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், தான் செய்தது பகுத்தறிவு இல்லாத செயல், தனது செயலை மறைக்கவோ நியாயப்படுத்தவோ விரும்வில்லை என்றும், மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறகு, எனக்கு மனநிலை சரியில்லை என்பதை புரிந்துகொண்டதாகவும், பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டிய தான் மக்களை ஏமாற்றிவிட்டதாவதும், அதற்காக வருந்துவதாகவும் கூறி கோல்ரிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கோல்ரிஸை என்னால் பாதுகாக்க முடியாது, ஆனால் அவர் எம்.பி.யானதில் இருந்து அவருக்கு பல்வேறு வகையான மிரட்டல்கள் வருகின்றன. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என பசுமைக் கட்சித் தலைவர் ஜேம்ஸ் ஷா கூறினார்.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக ஜேம்ஸ் ஷா மேலும் கூறினார்.

2021ல் ஒரு நேர்காணலில், தனக்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் அச்சுறுத்தல்கள் வருவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் தனது வீட்டில் ஒரு அபாய எச்சரிக்கையை நிறுவ வேண்டியிருந்தது என்றும், இந்த அச்சுறுத்தல்கள் சமீபத்தில் தான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு பேரணியை ஏற்பாடு செய்தபோது இன்னும் அதிகரித்து இருப்பதாகவும் கோல்ரிஸ் கூறியுள்ளார்.

lankasri


 





Post a Comment

0 Comments